நீ இல்லாத என் உலகம் - அவள்
by (Glifford Kumar)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )
நீ இல்லாத என் உலகம்
எப்பொழுதும் போலவே விடிகிறது
எதிலுமே மாற்றம் இல்லை.
என்னிலும் மாற்றம் இல்லை
கண்மூடி உறங்க போகும் நேரம் தவிர
காலை எழுவதில் பிரச்சனை இல்லை
என்ன பாட்டை கேட்பது என்பதை தவிர
பாட்டை ரசிப்பதில் பிரச்சனை இல்லை
என்னை பற்றி யோசிப்பதை தவிர
யோசனை செய்வதில் பிரச்சனை இல்லை
வேலையில் கவனம் செலுத்துவதை தவிர
வேலை செய்வதில் பிரச்சனை இல்லை
குறுஞ்செய்தி வந்தால் உடனே பார்க்க
வேண்டுமென்பதில்லை
அழைப்பு வந்தால் உடனே எடுக்க
வேண்டுமென்பதில்லை
\"_______\"
என் தன்னம்பிக்கையை கொலை செய்தவளே(னே)
நீ இல்லை என்றாலும்
என் உலகம் இயங்கும்
எப்போதும் போல..
Show commentsOpen link
Post a Comment