News Update :

நீங்கள் காதலித்தது உண்டா ?

Home » » உன் புன்னகையில் un punnakai tamil kavithai

உன் புன்னகையில் un punnakai tamil kavithai

Penulis : Tamil on Saturday, September 14, 2013 | 8:37 AM

உன் புன்னகையில்

உன்னை நினைக்கும்போது 
எல்லாமிருந்தும் 
எதுவுமில்லாததொரு உணர்வில் 
உருகிப் போகிறேன் .........!

புரிதலின்றிய உனக்கு 
ஒவ்வொரு தடவையும் 
புரியவைத்துப் புரிய வைத்தே 
தோற்றுப் போகிறேன் ......!

உன் வாழ்வை வெளிச்சமாக்க  
மெழுகுதிரியான என்னை 
சூனியத்துள் தள்ளிவிட்டு 
உன்னுள்ளே சிரிக்கின்றாய் ...!

விளம்பர வெளிச்சம் தேடி 
நீயும் 
அடையாளம் தெரியாத 
பிணமுமாய் நானும் 
வாழ்தலை எண்ணி 
நொந்து கொள்கிறேன்............!

வேண்டியபோது 
கிடைக்காத உன்னன்பு 
வேண்டாதபோது 
தேவையில்லை எனக்கு
உன் நினைவுகளே போதும்....!
------------------------------------------------------------------
தமிழின் தோழி (யாழ்)

Share this article :

Post a Comment

Popular Posts

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. KATHAL VARIGAL . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger