காதலித்து பாருங்கள் ........
by (உமா சிவா )
RSS 2.0 - News UpdatesToday,
அநேக ஆண்களுக்கு
காதல் மனைவி
காவிய தலைவியாய்,
சரித்திர நாயகியாய்
இருக்க வேண்டும்
என்று தான் ஆசை.
இராமனுக்கு சீதையாய்
நளனுக்கு தமயந்தியாய்
சத்தியவானுக்கு சாவித்திரியாய்
மங்கையர் வேண்டுமென்று
பலர் கேட்டால்
என்னை விரும்ப நினைப்பவனே !
வள்ளுவனுக்கு ஒரு வாசுகியாய்
நான் வர வேண்டுமென்று
நீ கேட்கிறாய் ...........
வள்ளுவன் எழுதிய
1330 குறள்களை
ஆறுதலாய் வாசிக்கவே
பொறுமை இல்லாத உனக்கு
நான் வாசுகியாய்
வருவது எப்படி ......?
ஆண் குலம் இப்படியே எதிர்பார்த்தால்
சேவைக்கு ஒரு மணிமேகலையாய்
முதுமைக்கு ஒரு ஒளவையாய்
பெண்ணினம் புறப்பட்டு விடும் .
நீங்களும் மனிதர்
நாங்களும் மனிதர்
மனிதபெண்ணை மனிதனாய் இருந்தே
காதலித்து பாருங்கள் ........
நம் மனிதக் காதலும்
என்றாவது ஒரு நாள் காவியமாகும் ....................
Post a Comment