பல கலை படைப்புகளை தாங்கும் பூமி
இடை கூடியபோதும் கவிழ்ந்ததில்லை...
கலை அதிசயமாக நீ சென்றால்
கவிழுமோ இந்த பூமி!!
நீ தொட்ட பாறை
பருத்தியில் பூத்த பஞ்சாகும் - நீ
நடந்து சென்ற பாதை
கால் புதையும் மணலாகும் (மென்மை)
நீரின்றி பூக்காது - நீ
சூடும் பூ வாடாது....
உன் பின்னிய கூந்தல்
லோலகம் போல் - ஆடும்
என் உயிரோ ஊசல்......
மேகத்தை குடையாக்கி
என்னை நிழலாக்கி
நிழலின்றி செல்வாயே
நீயின்றி நானில்லை
செதுக்கப்பட்ட உன் இரு கண்களில்
கண்ணாடியென கரு விழிகள்
உன்னுள் எனை கண்டேனடி தோழி
உன் மெல்லிடை மேனி வீசும் ஒளியால்
மேகத்தின் இடை சூரியன் ஒளியும்
அதிசயம் காண்கிறேன்.....
நீ கண்மையிட்டதால்
பெருமையில் கருமை
பொறாமையின்றி கருத்து மின்னும்
உன் அளவான
அழகு புன் சிரிப்பும் வெள்ளை பற்களும்
முகத்தில் ஜொலித்தது
தங்கத்தில் வைரம் பதித்த நகையென
உன்னை சுற்றி வந்து
உன் மார்பில் விழ
நைந்து போன - நூல்
பெருமூச்சு விட்டது
சேலையாய் நீ அணிந்த பிறகு
கை பிடித்து செல்வாயோ
கண்மூடி நான் வருவேன்
ஏழு கடல் கடந்து - உன்
இதய வாசல் அடைவேன் ....
தட்டுங்கள் திறக்கப்படும்
தட்டாமலே திறந்தாயே
கேளுங்கள் கொடுக்கப்படும்
கேட்காமலே கொடுத்தாயே
உன் இதயத்தில் ஓர் இடம்......
உன் நினைவுகள் என்னை
கடக்கும் போதும் கடத்தும் போதும்
நான் மோட்சம் பெறுவேன்....
Post a Comment