நிம்மதி
by (saimaran)
காதல் தோல்வி கவிதைகள்
கடலுக்கு அலை ஓய்ந்தால் நிம்மதி
அலைக்கு காற்று ஓய்ந்தால் நிம்மதி
காற்றுக்கு மழை ஓய்ந்தால் நிம்மதி
மழைக்கு இடி ஓய்ந்தால் நிம்மதி
இடிக்கு மின்னல் ஓய்ந்தால் நிம்மதி
மின்னலுக்கு மேகம் ஓய்ந்தால் நிம்மதி
மேகத்திற்கு ஈரம் ஓய்ந்தால் நிம்மதி
ஈரத்திற்கு வெப்பம் ஓய்ந்தால் நிம்மதி
வெப்பத்திற்கு வெக்கை ஓய்ந்தால் நிம்மதி
வெக்கைக்கு கானல் ஓய்ந்தால் நிம்மதி
கானலுக்கு அனல் ஓய்ந்தால் நிம்மதி
அனலுக்கு மாசு ஓய்ந்தால் நிம்மதி
மாசுக்கு மனிதன் ஓய்ந்தால் நிம்மதி
மனிதனுக்கு மரணம் ஓய்ந்தால் நிம்மதி
மரணத்திற்கு அழுகை ஓய்ந்தால் நிம்மதி
அழுகைக்கு கண்ணீர் ஓய்ந்தால் நிம்மதி
கண்ணீருக்கு கண்கள் ஓய்ந்தால் நிம்மதி
கண்களுக்கு கனவு ஓய்ந்தால் நிம்மதி
கனவுக்கு காதல் ஓய்ந்தால் நிம்மதி
காதலுக்கு காமம் ஓய்ந்தால் நிம்மதி
காமத்திற்கு தேகம் ஓய்ந்தால் நிம்மதி
தேகத்திற்கு காயம் ஓய்ந்தால் நிம்மதி
காயத்திற்கு வலிகள் ஓய்ந்தால் நிம்மதி
வலிகளுக்கு கிருமிகள் ஓய்ந்தால் நிம்மதி
கிருமிகளுக்கு மருந்துகள் ஓய்ந்தால் நிம்மதி
மருந்துகளுக்கு வேதியல் ஓய்ந்தால் நிம்மதி
வேதியலுக்கு விஞ்ஞானம் ஓய்ந்தால் நிம்மதி
விஞ்ஞானத்திற்கு விரோதம் ஓய்ந்தால் நிம்மதி
விரோதத்திற்கு துரோகம் ஓய்ந்தால் நிம்மதி
துரோகத்திற்கு குரோதம் ஓய்ந்தால் நிம்மதி
குரோதத்திற்கு குதர்க்கம் ஓய்ந்தால் நிம்மதி
குதர்க்கத்திற்கு தர்கம் ஓய்ந்தால் நிம்மதி
தர்கத்திற்கு விவாதம் ஓய்ந்தால் நிம்மதி
விவாதத்திற்கு வீரியம் ஓய்ந்தால் நிம்மதி
வீரியத்திற்கு காரியம் ஓய்ந்தால் நிம்மதி
காரியத்திற்கு தர்மம் ஓய்ந்தால் நிம்மதி
தர்மத்திற்கு அதர்மம் ஓய்ந்தால் நிம்மதி
அதர்மத்திற்கு அகிலம் ஓய்ந்தால் நிம்மதி
அகிலத்துக்கு அனைத்தும் ஓய்ந்தால் நிம்மதி.
Show commentsOpen link
Post a Comment