உன்னுள் என்னைப் பார் unnul ennai paar
by (malar1991)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )
உன்னுள் என்னைப்பார்
கையிலே வெண்ணெய்
நெய்வேண்டி
நான் அலையவில்லை!
உருக்க நினைக்கும் போதெல்லாம்
வெண்ணெய்
கல்லாக மாறும் விந்தை
எனக்குத் தெரிந்த புதிர்தான்.
இருந்தாலும்
நெய்வேண்டி நான் அலைவதில்லை.
நீயும் நானும் அப்படித்தான்;
கல்லாய்ப் போவது நீதான்!
நான் வளர்ச்சியின்றி இருப்பதாய்
நீ நினைப்பதால்தான்
நீ கல்லாகிப் போகிறாய்;
நானோ கலங்கி நிற்கின்றேன்!
நான் மரமாகி விட்டேன்
நீயோ, இன்னும் செடியாகத்தான்
என்னைப் பார்க்கிறாய்!
நான் ஊற்றுநீர்
என்னைப் பாசிபடிந்த
குட்டை நீராகத்தான்
நீ பார்க்கிறாய்.
நீயும் நானும் ஒன்று என்று
நீ நினைத்தால் நன்று
என்னுள் உன்னைப் பார்
உன்னுள் நானே தெரிவேன்.
வெறுப்பால் என்னை எரித்தால்
நான் கரியாய்த்தானே உதிர்வேன்!
எலும்பும் தோலுமான உடலில்
இல்லை உண்மை அழகு!
அன்பு நெஞ்சம்தானே
அழகு என்ற உண்மையை
என்றோ நானும் அறிந்தேன்!
உன் பார்வையில் என்னை நிறுத்தி
முடிந்தால் திருத்திப்பார்;
உன் வருத்தம் எல்லாம்
மறையும்.
நீயும் நானும் சேர்ந்து
நமக்கு நலமாய்த் தெரிவொம்!
நீயும் நானும் ஒன்று
என்று வாழக் கற்ப்பது நன்று.
(1988)
Show commentsOpen link
Post a Comment