என் இதயம் உன்னிடம்
by (jayarajarethinam)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today )
நினைத்தேன்
ரசித்தேன்
சுவாசித்தேன்
என் உயிர் உன் துடிப்பில்
ஒவ்வொரு நொடியிலும் ...!
வியந்தேன்
மறந்தேன்
மயங்கினேன்
என் உயிர் உன் னிடம்
ஒர விழிப் பார்வையில்...!
எழுதினேன்
கவிதையாக என்
காதலை மட்டும்
உன் நினைவுகளில்
என்னைத் தேடினேன் ...!
படம் பிடித்தேன்
கற்பனை வடிவில் உருவானது
அழகான தாஜ் மஹால்
விரைந்து பூட்டி வைத்தேன்
தொலையாமல் இருக்க
சாவி மட்டும்
என் சொக்காயில்..!
Show commentsOpen link
Post a Comment