ஒரு ரோஜா
ஒரு ரோஜா கொடுத்து
என் காதலை சொன்னபோது
நீ ஏற்றுக் கொள்ளவில்லை
இப்போது காக்கை,குருவி
வந்து முத்தமிட்டு செல்லும்
என் கல்லறையில்
கூடை கூடையாய்
வாசமிகு பூக்களை கொட்டுகிறாய்...
இதுவும் சுகம்தானம்மா..
என் ஆத்மாவிற்கு....
இதற்காவது என் உயிர் பிரிந்ததே...
Show commentsOpen link
Post a Comment