மனதிலும் நினைக்காதே நண்பனே! தோழியே!
உனக்காகவே துடிக்க உன் இதயமும்
உனக்காகவே சுவாசிக்க உன் நுரையீரலும்
உனக்கு பசிக்காமலும்,
உனக்கு கண்ணாக பார்த்துக்கொள்ள
உன் அம்மாவும்
உன்னை உருவாக்க ஓயாமல் உழைக்க
உன் அப்பாவும்
எத்தனை அழுக்கனாலும் உன் உடையை
உடனே துவைத்து கொடுக்கும் அன்பான அக்காவும்
எத்தனை முறை திட்டினாலும்
உன்னை மற்றவர்களிடம்
விட்டுகொடுக்காத அண்ணனும்
எத்தனை முறை திட்டினாலும்
எத்தனை முறை அடித்து கொண்டாலும்
என் அண்ணன்! என் தம்பி!
என் அக்கா! என் தங்கை!
என் எப்போதும் மெச்சிகொள்ளும்
உறவுகளும்,
நீ இருக்கும்போது
உன்னை கலாய்த்து....
நீ இல்லாதபோது
உன்னை துளியும் விட்டுகொடுக்காத
நண்பர்களும் இருக்கும்போது
யாரோ ஒருத்திகாக
யாரோ ஒருவனுக்காக
மதிப்பெண் என்ற - நாளை
மக்கிபோகும் காகிதத்திற்காகவும்
மண்ணாய் போக - உன்
மனதிலும் நினைக்காதே
நண்பனே!
தோழியே!
Post a Comment