+வாழ்க்கை எல்லாம் காத்திருப்பேன்டி...!+
by (அ வேளாங்கண்ணி)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today,
ஆத்தங்கர ஓரத்தில
==யாருமற்ற நேரத்தில
காத்திருந்தேன் நீவருவேனு...
==என் தங்கமே தங்கம்!
பாத்திருந்தேன் நீவருவேனு...!
சூரியனும் ஒளிஞ்சுக்கிச்சு!
==வெண்ணிலவும் சிரிச்சுருச்சு!
உம்மொகத்த இன்னும்காணலியே...
==என் தங்கமே தங்கம்!
என்மொகத்து சோகம்தீரலியே...!
ஆத்துமணல் எண்ணிப்புட்டேன்!
==காத்துக்கதை கேட்டுப்புட்டேன்!
பத்துமணி ஆயிபோச்சுதடி...
==என் தங்கமே தங்கம்!
சத்தியமா ஆவிபோச்சுதடி...!
ஆத்துதண்ணி சிரிக்குதடி!
==இருட்டும்என்னை மொறைக்குதடி!
கூதக்காத்து விரட்டபாக்குதடி...
==என் தங்கமே தங்கம்!
காதலையும் கேள்விகேக்குதடி...!
நாளையும் இந்தநேரம்!
==நான்வருவேன் கரைஓரம்!
உன்னைத்தான் பாத்திருப்பேன்டி...
==என் தங்கமே தங்கம்!
வாழ்க்கைஎல்லாம் காத்திருப்பேன்டி...!
Show commentsOpen link
Post a Comment