முதல் வலி!
காதல் தோல்வி கவிதைகள்
அம்மா அடித்த முதல்வலி
பட்டம் வாங்கியதும் மறைந்தது.
நல்ல காரியத்தில்
சின்னபையன்-என்று
உறவினர் சொல்லின் முதல்வலி
மீசை முளைத்ததும் மறைந்தது.
தண்டச்சோறு என்று சொன்ன
அப்பா பேச்சின் முதல்வலி
பதவி வந்ததும் மறைந்தது.
காதல் உணர்வின் தோல்விதந்த
காயத்தின் முதல்வலி---
மனைவி வந்தும் மறையவில்லை....
இந்த முதல்வலியின் முடிவுக்கு
என்ன வழி?!...
Show commentsOpen link
Post a Comment