News Update :

நீங்கள் காதலித்தது உண்டா ?

Home » » நட்பு natpu or friendship

நட்பு natpu or friendship

Penulis : Tamil on Monday, September 2, 2013 | 11:39 PM


நட்பு என்ற  நிறம் எடுத்து  வானில்
   வீசினேன் அடடா
  அது வானவில் ஆனது .......
  நட்பு என்ற காற்றெடுத்து
  மூங்கிலில்  ஊதினேன்
  அடடா அது மெல்லிசை யானது .......
  வீட்டிற்கு உள்ள சோகமும்
   நட்பிற்கும் மறந்து போய்விடும்
  காதலின்   ரணத்தை கூட
  நடப்பு மாற்றி விடும் .......
  தினம் தினம் எத்தனையோ
  அரட்டைகள் .......
  மட்டிகொண்டலும்   காட்டி
  கொடுக்காமல்
  தண்டனை ஏற்கும் கடவுள்கள்
  நண்பர்கள் .........
  பயம் என்ற ஒன்று வரும் முன்னே'
  தோளில்  கை போட்டு
  தைரியம்  சொல்வது தான் நட்பு........
  அன்னையிடம் கூட மறைக்க தோன்றும்
  நட்பிடம் எல்லாம் உரைக்க  தோன்றும்
  பிரிவு கூட சோகம் தான்
  நட்பின் நினைவு  உடன்னிருகையில் ....
  காலங்கள்  ஓடிபோகும்
  பருவங்கள் மாறி போகும்
  குடும்பம் ஒன்று வரும்
   உறவுகள்  ஆயிரம் வரும் ......
  ஆயினும்  அடி மனதில்
  வாழும் சொந்தம் நட்பு
  மட்டுமே
  பழைய புகைப்படம்
  அதில் நண்பர் பட்டாளம்
  துடைத்து  வைக்கையில்
  தானாய்  கலங்கும் விழிகள்
  தன்  பிள்ளைக்கு சோறு ஊட்டுகையில்
  தன்னை  பிள்ளையாய்  நினைத்து
  சோறு  ஊட்டிய  தோழி என்னும்
  அன்னையின்  நியாபகம் .........
   அங்கங்கே வாழ்ந்த போதும்
   நினவு உலகில் என்றும் ஒன்றாய்.
  மரண படுக்கையில்  இருக்கும்போதும்
  மனதில் இளமையும்
  இதழில் புன்னகையும்
  தருவது  "நட்பு" மட்டுமே
.............
               நட்புடன்
                   நிலா மகள

Share this article :

Post a Comment

Popular Posts

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. KATHAL VARIGAL . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger