News Update :
Powered by Blogger.

நீங்கள் காதலித்தது உண்டா ?

நீ இல்லாத என் உலகம் Nee illatha en ulagam aval tamil kavithaigal

Penulis : Tamil on Monday, September 30, 2013 | 6:23 AM

Monday, September 30, 2013

நீ இல்லாத என் உலகம் - அவள்
by (Glifford Kumar)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

நீ இல்லாத என் உலகம் 
எப்பொழுதும் போலவே விடிகிறது
எதிலுமே மாற்றம் இல்லை.
என்னிலும் மாற்றம் இல்லை 

கண்மூடி உறங்க போகும் நேரம் தவிர 
காலை எழுவதில் பிரச்சனை இல்லை
என்ன பாட்டை கேட்பது என்பதை தவிர  
பாட்டை ரசிப்பதில் பிரச்சனை இல்லை

என்னை பற்றி யோசிப்பதை தவிர 
யோசனை செய்வதில் பிரச்சனை இல்லை
வேலையில் கவனம் செலுத்துவதை தவிர 
வேலை செய்வதில் பிரச்சனை இல்லை

குறுஞ்செய்தி வந்தால்  உடனே பார்க்க 
வேண்டுமென்பதில்லை 
அழைப்பு வந்தால் உடனே எடுக்க 
வேண்டுமென்பதில்லை 

\"_______\"
என் தன்னம்பிக்கையை  கொலை செய்தவளே(னே) 
நீ இல்லை என்றாலும்
என் உலகம் இயங்கும் 
எப்போதும் போல..
Show commentsOpen link

comments | | Read More...

நினைவுகளை நிஜம் ...! Ninaivugal nijam

Penulis : Tamil on Sunday, September 29, 2013 | 10:55 PM

Sunday, September 29, 2013

நினைவுகளை நிஜம் ...!!!
by (கவிஞர் K இனியவன்)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

நிஜம் எம்மை பிரிக்கும் போது 
காதல் தோற்று விடுகிறது 
நினைவுகள் மட்டும் நிஜமாகிறது 
நினைவுகள் நியமானதற்கு
காரணம் ..... 
நினைவுகளை நிஜம் என்று 
நம்பியது தான் ....!!!
Show commentsOpen link

comments | | Read More...

என் இதயம் உன்னிடம் en ithayam unnidam

என் இதயம் உன்னிடம்

by (jayarajarethinam)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today )
நினைத்தேன் 
ரசித்தேன் 
சுவாசித்தேன் 
என் உயிர் உன் துடிப்பில் 
ஒவ்வொரு நொடியிலும் ...!

வியந்தேன் 
மறந்தேன் 
மயங்கினேன் 
என் உயிர் உன் னிடம் 
ஒர விழிப் பார்வையில்...!

எழுதினேன் 
கவிதையாக என் 
காதலை மட்டும் 
உன்  நினைவுகளில் 
என்னைத் தேடினேன் ...!

படம் பிடித்தேன் 
கற்பனை வடிவில் உருவானது 
அழகான தாஜ் மஹால்
விரைந்து பூட்டி வைத்தேன் 
தொலையாமல் இருக்க 
சாவி மட்டும் 
என் சொக்காயில்..!
Show commentsOpen link

comments | | Read More...

Kadhal Kavithaigal

Penulis : Tamil on Saturday, September 28, 2013 | 4:07 PM

Saturday, September 28, 2013

Kadhal Kavithaigal
by Manonmani Nagamani
Girls secret Vs Boys secret - Tamil Facebook SharesYesterday,

Related Searches : tamil kadhal kavithagal collection , best tamil kadhal kavithaigal pictures for facebook,tamil love message and sms pictures.

Show commentsOpen link

comments | | Read More...

உனக்கான கவிதை unakkana kavithai tamil kavithai

உனக்கான கவிதை
by (கவிஞர் K இனியவன்)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

உன்னை கண்டவுடன் 
பொய் சொல்ல முடியாமல் 
தவிர்க்கும் போது வருவதே 
உனக்கான கவிதை
Show commentsOpen link

comments | | Read More...

உன்னுள் என்னைப் பார் unnul ennai paar tamil kavithai

Penulis : Tamil on Friday, September 27, 2013 | 8:32 PM

Friday, September 27, 2013

உன்னுள் என்னைப் பார் unnul ennai paar

by (malar1991)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

உன்னுள் என்னைப்பார்

கையிலே வெண்ணெய்
நெய்வேண்டி
நான் அலையவில்லை!
உருக்க நினைக்கும் போதெல்லாம்
வெண்ணெய்
கல்லாக மாறும் விந்தை
எனக்குத் தெரிந்த புதிர்தான்.
இருந்தாலும் 
நெய்வேண்டி நான் அலைவதில்லை.

நீயும் நானும் அப்படித்தான்;
கல்லாய்ப் போவது நீதான்!
நான் வளர்ச்சியின்றி இருப்பதாய்
நீ நினைப்பதால்தான்
நீ கல்லாகிப் போகிறாய்;
நானோ கலங்கி நிற்கின்றேன்!

நான் மரமாகி விட்டேன்
நீயோ, இன்னும் செடியாகத்தான்
என்னைப் பார்க்கிறாய்!
நான் ஊற்றுநீர்
என்னைப் பாசிபடிந்த
குட்டை நீராகத்தான்
நீ பார்க்கிறாய்.

நீயும் நானும் ஒன்று என்று
நீ நினைத்தால் நன்று
என்னுள் உன்னைப் பார்
உன்னுள் நானே தெரிவேன்.
வெறுப்பால் என்னை எரித்தால்
நான் கரியாய்த்தானே உதிர்வேன்!

எலும்பும் தோலுமான உடலில்
இல்லை உண்மை அழகு!
அன்பு நெஞ்சம்தானே
அழகு என்ற உண்மையை
என்றோ நானும் அறிந்தேன்!

உன் பார்வையில் என்னை நிறுத்தி
முடிந்தால் திருத்திப்பார்;
உன் வருத்தம் எல்லாம்
மறையும்.
நீயும் நானும் சேர்ந்து
நமக்கு நலமாய்த் தெரிவொம்!
நீயும் நானும் ஒன்று
என்று வாழக் கற்ப்பது நன்று.

(1988)
Show commentsOpen link

comments | | Read More...

காதல்... kathal varigal kavithaigal

காதல்...
by (muhammadghouse)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today,)

நேசிக்கின்ற போது
கற்கண்டாக இனிக்கும்...
விலகுகின்ற போது
அணுகுண்டாக வெடிக்கும்...!
Show commentsOpen link

comments | | Read More...

மல்லிகை ஓர் அழகு மலர் mallikai oru azhaku malar

மல்லிகை ஓர் அழகு மலர்
by (KalpanaBharathi)

காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

மல்லிகை 
மலர்ந்த போது 
வெள்ளை மலர் 
மணம் வீசிய போது 
வாச மலர் 
அவள் கூந்தலில் சூடிய போது 
ஓர் அழகு மலர் . 

~~~கல்பனா பாரதி~~~
Show commentsOpen link

comments | | Read More...

காதல் kathal

காதல்
by (arsm1952)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

காதல் காதல் 
டிவி சீரியல்,  சினிமா  எங்கும் காதலே பிரதானம் 
காதல் தவிர ,வேறு களமே இல்லையா 
முடிந்த காதல் முடியாத காதல் 
பண்பாடு மீறிய காதல் 
இது தேவையா 
நமக்குளே நடப்பதை 
படம் போட்டு கட்டவேண்டுமா 
அறியா பருவத்து பிள்ளைகளை 
அறிந்தே கெடுக்கிறோமே
 
சிறந்த படம் என்று சொல்லுகின்ற 
இன்றைய     சினிமாவில்   
சமுக சிந்தனை எங்கிருக்கிறது 
சமுக நீதி எங்கிருக்கிறது 
அடிதடியும், வெட்டுக் குத்தும் 
பெரியோரை வசை பாடுதலும்
அரை வேக்காட்டு 
அரை ட்ரவுசர் கலாசாரமும்  
கற்பழிப்பும்,இதுதான் சிறப்பா?
இதுதான் சிறந்த சினிமாவா?

நாளைய தலைமுறைக்கு நல்லதை விட்டுச்செல்லுவோம்
Show commentsOpen link

comments | | Read More...

அவளது நினைவுகள் - இனிமை avalathu imaigal tamil kavithai

அவளது நினைவுகள் - இனிமை

by (HARI HARA NARAYANAN.V )
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

பன்னீர் ஊற்றிய 
ஏர் கூலர் 

பாசத்தோடு 
அவள் பேச்சு......! 

தனிமை எனக்கு 
இனிதாச்சி 

நினைவில் 
அவள் முகம் வந்தாச்சி...! 

எதிரே இருக்குது 
ரோஜாப்பூ 

அடடா சிரிக்குறா 
தித்திபபூ.....!
Show commentsOpen link

comments | | Read More...

கல்லறை காதல் kallarai kathal

Penulis : Tamil on Thursday, September 26, 2013 | 9:47 PM

Thursday, September 26, 2013

கல்லறை காதல்
by (ramesh tharanga)
காதல் தோல்வி கவிதைகள்

(Kadhal Tholvi ...

பூக்கள் பூத்து குலுங்க 
   வண்டுகள் சப்தம் இட 
கண்ணீர் துளிகள் தரை நனைக்க 
    எனக்காக வந்தவளே!!!!!
உன் கண்ணீரை துடைக்க 
    கை ஏலாமல் கட்டி 
அணைத்தன என் கைகள்
      என் நீசெப்த கல்லறையில் ....
Show commentsOpen link

comments | | Read More...

காதல் விதி... kathal vithi

காதல் விதி...

by (muhammadghouse)

காதல் தோல்வி கவிதைகள்

பூக்கள் பல
வண்ணங்களில் பூத்தாலும்
விழிகளால் - அதை
ரசிக்க முடியுமே தவிர
மணக்க முடியாது...

அப்படித்தான்
நாம் காதலிக்கும்
தேவதைகளும்...!
Show commentsOpen link

comments | | Read More...

முதல் வலி! Muthal vali tamil kathal kavithai

முதல் வலி!

காதல் தோல்வி கவிதைகள்

அம்மா அடித்த முதல்வலி
பட்டம் வாங்கியதும் மறைந்தது.

நல்ல காரியத்தில்
சின்னபையன்-என்று
உறவினர் சொல்லின் முதல்வலி
மீசை முளைத்ததும் மறைந்தது.

தண்டச்சோறு என்று சொன்ன
அப்பா பேச்சின் முதல்வலி
பதவி வந்ததும் மறைந்தது.

காதல் உணர்வின் தோல்விதந்த
காயத்தின் முதல்வலி---
மனைவி வந்தும் மறையவில்லை....
இந்த முதல்வலியின் முடிவுக்கு
என்ன வழி?!...
Show commentsOpen link

comments | | Read More...

உன்னத நேசம் tamil kathal kavithai by Mohamed Imzan

Penulis : Tamil on Wednesday, September 25, 2013 | 8:47 PM

Wednesday, September 25, 2013

உன்னத நேசம்.
by Mohamed Imzan

"என் இதயத்தை
தொட்டவளே...

என் உயிரில் 
கலந்தவளே..

முழு மூச்சும்
நீயாக.....

நானோ
ஜடமாக...

@Nafla

Show commentsOpen link

comments | | Read More...

வாழ்க்கை எல்லாம் காத்திருப்பேன்டி vaalkai ellam kathiruppen tamil kavithaigal

+வாழ்க்கை எல்லாம் காத்திருப்பேன்டி...!+
by (அ வேளாங்கண்ணி)

காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today,

ஆத்தங்கர ஓரத்தில‌
==யாருமற்ற நேரத்தில‌
காத்திருந்தேன் நீவருவேனு...
==என் தங்கமே தங்கம்!
பாத்திருந்தேன் நீவருவேனு...!

சூரியனும் ஒளிஞ்சுக்கிச்சு!
==வெண்ணிலவும் சிரிச்சுருச்சு!
உம்மொகத்த இன்னும்காணலியே...
==என் தங்கமே தங்கம்!
என்மொகத்து சோகம்தீரலியே...!

ஆத்துமணல் எண்ணிப்புட்டேன்!
==காத்துக்கதை கேட்டுப்புட்டேன்!
பத்துமணி ஆயிபோச்சுதடி...
==என் தங்கமே தங்கம்!
சத்தியமா ஆவிபோச்சுதடி...!

ஆத்துதண்ணி சிரிக்குதடி!
==இருட்டும்என்னை மொறைக்குதடி!
கூதக்காத்து விரட்டபாக்குதடி...
==என் தங்கமே தங்கம்!
காதலையும் கேள்விகேக்குதடி...!

நாளையும் இந்தநேரம்!
==நான்வருவேன் கரைஓரம்!
உன்னைத்தான் பாத்திருப்பேன்டி...
==என் தங்கமே தங்கம்!
வாழ்க்கைஎல்லாம் காத்திருப்பேன்டி...!
Show commentsOpen link

comments | | Read More...

இதயம் tamil love failure kavithai

Tamil love failure kavithai

உயிரே...!
உன் இதயம்
நெருப்பின் பிறப்பிடமா??
அல்லது
முட்களின்
இருப்பிடமா???

என் நினைவுகள்
உனக்குள் நுளையும்
போது
சிதைவுற்றுத்
தொலைகின்றது

நீ உறைக்கும்
வார்த்தைகள்
அனலாய்த்
தெரித்து
என் இதயத்தை
எரிக்கின்றது.

ஒரு கணம்
உன் ஆத்திரத்தை நிறுத்தி
உன்னோடு பழகிய
அந்த நாட்களை
நினைத்துப் பார்...

kanneer.png (344×281)

என் மனம்
வலிச் செறிவினால்
வடிக்கும் இரத்தக்
கண்ணீர் உனக்கு
புரியாதா?

உன் அன்பை
வேண்டி உன்னிடத்தில்
மன்றாடும் என்
உளப் பதறல்
உனக்குப்
புரியாதா?

எரி கட்களில்
மோதிய
நிலவு போல
உன் ஆவேச
உணர்வுகளால்
என் இதயத்தை
நொருக்கி
விட்டாயே...

பு போன்ற
மென்மையானவள்
என உன்னை
நினைத்தற்கு
நீ குடுக்கும்
பதிலடியா இது,...????

**************************************************************************
இக்கவி பிடித்திருந்தால் உங்கள் நண்பா்களுக்கும் பகிர்ந்திடுங்கள்          
அல்லது                                                                                                                                 
கருத்துக்களை தெரிவியுங்கள்.. கவிஞரின் முன்னேற்றத்துக்கு உதவும்

comments | | Read More...

Love Failure Tamil SMS

Love Failure Tamil SMS

Vall Nal Muzhuvathum un
Kaiyal Sapid Vendum Edru Ninaithirunthen,
Aanal Indru Vaikarusi Kidaikumo Kidaikatho
Endru Engikondirukiren....

comments | | Read More...

Ithuvarai tamil love failure kavithai

Ithuvarai

Unnaipol Yaarum Yennai

Kaayam Seyyavum  Illai

Kadhal Kollavum Illai

Athanaal Than Innum Kooda

Unnaiye Ninaithu Kondu

Irukkiren....!!!

comments | | Read More...

நிம்மதி Nimmathi காதல் தோல்வி கவிதைகள்

நிம்மதி
by (saimaran)
காதல் தோல்வி கவிதைகள்

கடலுக்கு அலை ஓய்ந்தால் நிம்மதி
அலைக்கு காற்று ஓய்ந்தால் நிம்மதி
காற்றுக்கு மழை ஓய்ந்தால் நிம்மதி
மழைக்கு இடி ஓய்ந்தால் நிம்மதி
இடிக்கு மின்னல் ஓய்ந்தால் நிம்மதி
மின்னலுக்கு மேகம் ஓய்ந்தால் நிம்மதி
மேகத்திற்கு ஈரம் ஓய்ந்தால் நிம்மதி
ஈரத்திற்கு வெப்பம் ஓய்ந்தால் நிம்மதி
வெப்பத்திற்கு வெக்கை  ஓய்ந்தால் நிம்மதி
 வெக்கைக்கு கானல் ஓய்ந்தால் நிம்மதி
கானலுக்கு அனல் ஓய்ந்தால் நிம்மதி
அனலுக்கு மாசு ஓய்ந்தால் நிம்மதி 
மாசுக்கு மனிதன் ஓய்ந்தால் நிம்மதி
மனிதனுக்கு மரணம் ஓய்ந்தால் நிம்மதி
மரணத்திற்கு அழுகை ஓய்ந்தால் நிம்மதி
அழுகைக்கு கண்ணீர் ஓய்ந்தால் நிம்மதி
கண்ணீருக்கு கண்கள் ஓய்ந்தால் நிம்மதி
கண்களுக்கு கனவு ஓய்ந்தால் நிம்மதி
கனவுக்கு காதல் ஓய்ந்தால் நிம்மதி
காதலுக்கு காமம் ஓய்ந்தால் நிம்மதி
காமத்திற்கு தேகம் ஓய்ந்தால் நிம்மதி
தேகத்திற்கு காயம் ஓய்ந்தால் நிம்மதி
காயத்திற்கு வலிகள் ஓய்ந்தால் நிம்மதி
வலிகளுக்கு கிருமிகள் ஓய்ந்தால் நிம்மதி
கிருமிகளுக்கு மருந்துகள் ஓய்ந்தால் நிம்மதி
மருந்துகளுக்கு வேதியல் ஓய்ந்தால் நிம்மதி
வேதியலுக்கு விஞ்ஞானம் ஓய்ந்தால் நிம்மதி
விஞ்ஞானத்திற்கு விரோதம் ஓய்ந்தால் நிம்மதி
விரோதத்திற்கு துரோகம் ஓய்ந்தால் நிம்மதி
துரோகத்திற்கு குரோதம் ஓய்ந்தால் நிம்மதி
குரோதத்திற்கு குதர்க்கம் ஓய்ந்தால் நிம்மதி
குதர்க்கத்திற்கு தர்கம் ஓய்ந்தால் நிம்மதி
தர்கத்திற்கு விவாதம் ஓய்ந்தால் நிம்மதி
விவாதத்திற்கு வீரியம் ஓய்ந்தால் நிம்மதி
வீரியத்திற்கு காரியம் ஓய்ந்தால் நிம்மதி
காரியத்திற்கு தர்மம் ஓய்ந்தால் நிம்மதி
தர்மத்திற்கு அதர்மம் ஓய்ந்தால் நிம்மதி
அதர்மத்திற்கு அகிலம் ஓய்ந்தால் நிம்மதி
அகிலத்துக்கு அனைத்தும் ஓய்ந்தால் நிம்மதி.
Show commentsOpen link

comments | | Read More...

பருவ மங்கை tamil Kavithai ---------- அணை

Penulis : Tamil on Monday, September 23, 2013 | 5:08 PM

Monday, September 23, 2013

Kavithai ---------- அணை
by UPPILI SRINIVAS
New Tamil Jokes - Yesterday, 21:57
அணை

பருவ மங்கை போல் துள்ளி குதித்தாள்
கட்டிளங் காளை போல் சீறி பாய்ந்தாள்
தாங்குவதற்கு தயக்கமின்றி இருப்பது தரணி
கட்டுபாடின்றி கண்ட இடமெல்லாம் ஓடிய நீ
காதலியைக் கண்ட காதலன் போல் ஓடிவந்து
அணைத்தாய் என்னை சுகமாய் மிதந்துவந்து
காக்க நினைத்து உன்னை நெஞ்சில் சுமந்தாலும்
அலைகால் கொண்டு உடைத்து போனாலும்
கெட்டுத் தான் தாறுமாறாய் ஓடுகிறாய் ஏனோ?
உனக்கு நான் இருப்பேன் அணையாய் - ஏனோ ?

Respected friends c the kavithai written by me

with regards
Dr.G. Uppili srinivasan

Show commentsOpen link

comments | | Read More...

True Love - Tamil Kavithai

True Love - Tamil Kavithai
by Manonmani Nagamani
Girls secret Vs Boys secret - Tamil Facebook SharesYesterday, 23:11

Related Searches : tamil kathal kavithaigal, best kathal kavithai for facebook shares , best love failure tamil kavithai message sms.

Show commentsOpen link

comments | | Read More...

Chillena Oru Mazhai Thuli

Penulis : Tamil on Friday, September 20, 2013 | 5:14 AM

Friday, September 20, 2013

Chillena Oru Mazhai Thuli

by Parasakthi
New Tamil Jokes - comToday,

Chillena Oru Mazhai Thuli
Ennai Nanaikuthey Penne
Siragugal Yaar Koduthathu
Nenjam Parakuthey Munne
Un Vizhigalile Naan Vaazhgiraen Penne
Un Kanavugalaal Naan Maarinen Penne
Oh Ho Ho Ho..
Oh Ho Ho Ho..

Ada Karuppattiye Geeni Kazhange
Sirichu Kavukaathe
En Kannukutye Kamma Karayil
Nee Kappal Ottothae
Kannale Paakama Kannaalam Pannalaama?
Kaikorthu Polaama **HELP1**

Konjam Paarthuvidu Konjam Paesividu
Endru Enn Vizhigal Aiyaiayo Ennathitta
Kodaikaala Mazhai Vanthu Ponapinnum
Saalai Oram Maram Thannale Neer Sotta
Ennai Thaakkum Puyale Iravodu Kaayum Veyile

Unnaale Unnaale Nool Illa Kaatradi Aanaenae
Adi Penne Adi Penne
Naan Vizhunthaal Un Paatham Saervenae
Un Vizhigalile Naan Vaazhgiraen Penne
Un Kanavugalaal Naan Maarinen Penne

Chillena Oru Mazhai Thuli
Ènnai Nanaikuthey Penne
Širagugal Yaar Køduthathu
Nenjam Parakuthey Munne
Un Vizhigalile Naan Vaazhgiraen Penne
Un Kanavugalaal Naan Maarinen Penne

Kaathal Vanthavudan Kaaichal Vanthathadi
Meendu Naan Pizhaikka Muthangal Tharuvaaya
Købam Kølgaiyilum Kiranga Vaikkuthadi
Meendum Orumurai Nee Købathil Paarpaaya
Aalai Køllum Azhage Nizzhal Køøda Azhagin Nagale
Orunaalum Kurayaatha Puthu Bøthai Kannøram Thanthaaye
Anaithaalum Anayaatha Oru Theeyaayi Nenjøram Vanthaaye
Adi Idam Valamai Naan Aadinaen Penne
Oru Idi Mazhayil Ènnai Thaakinaai Munnae

Show commentsOpen link

comments | | Read More...

விழிகள் தேடுதடா... vizhigal theduthada

Penulis : Tamil on Tuesday, September 17, 2013 | 8:04 AM

Tuesday, September 17, 2013

விழிகள் தேடுதடா...

News UpdatesToday,

விழிகள் 
வழியெல்லாம் தேடுதடா 
உன் வரவை...
எத்தனை நாட்கள்  முடிந்தாலும் 
விடியும் நாளுக்காகவே 
ஏங்குகிறது நெஞ்சம்...
அன்று எனக்காய் துடித்த 
உன் இதயம்
இன்று என்னை 
துடிதுடிக்க விட்டுசென்றது ஏன்?
நீ இன்றி போனாலும் 
உன் நினைவின்றி நானில்லை....
Show commentsOpen link

comments | | Read More...

என் கவிதையின் கரு நீ தான் ! Nilavu kvithai tamil

என் கவிதையின் கரு நீ தான் !

நிலவே !நீ மறையும் 
                                போது 
உனக்கு மட்டுமல்ல 
                               உறக்கம்.
எனக்கும் தான் 
                  மலரின் காதல்
பணித்  துளிகளுக்குத்
                          தெரியும்.
என் மனதின் காதல் 
உனக்குப் புரியாமல் 
இருப்பது ஏன்??
                    உனக்காக
இழப்பதற்கு ஒன்றுமில்லை
என்னிடம் உயிரைத் தவிர!!
Show commentsOpen link

comments | | Read More...

வலி tamil kathal kavithai

Penulis : Tamil on Monday, September 16, 2013 | 5:10 PM

Monday, September 16, 2013

வலி

உன்
வார்த்தைகள் எல்லாம் 
என்னை 
முள்ளாக குத்தி குத்தி 
கிழித்தாலும்,
உன் அன்பு மட்டும் 
போதும் 
என் ஜீவன்  வாழ....

comments | | Read More...

காதல் விதி...kathal vithi tamil kavithai

காதல் விதி...

RSS 2.0 - News UpdatesToday,

விழிகளின்
காதல் அணுகுண்டு
வீச்சுக்கு
முதலில் பலியாவது
இதயம் தான்...!

பிறகு
ஒவ்வொன்றாய் மடியும்
இது காதலின் விதி...!

comments | | Read More...

காதல்... kathal kavihai tamil

Penulis : Tamil on Sunday, September 15, 2013 | 5:12 PM

Sunday, September 15, 2013

காதல்...

இதய பேரலைகளால்
தாக்கப்படும் சுனாமி
காதல்...!

இதய காற்றழுத்த
தாழ்வு நிலை
காதல்...!

இதயத்தை மட்டும்
இலக்காய் வைத்து
மையம் கொள்ளும் புயல்
காதல்...!

அன்புடன்

நாகூர் கவி.
Show commentsOpen link

comments | | Read More...

உனக்காக அழுவதே -காதல் ....! Unakkaga azhuvathe kathal

உனக்காக அழுவதே -காதல் ....!!!

என்னை
நினைத்து -துடித்த 
என் இதுயம் -உன்னை நினைத்து 
துடிக்க முற்படுவதே காதல் ...!!!

எனக்காகவே அழுத்த கண்கள் 
உனக்காக அழுவதே -காதல் ....!!!

comments | | Read More...

காதல் மறந்து விடுவதில்லை... tamil kathal kavithai

காதல் மறந்து விடுவதில்லை...

கலைந்து செல்லும்
மேகங்கள் தொலைந்து
விடுவதில்லை...

பிரிந்து செல்லும்
காதல் மறந்து
விடுவதில்லை...!

அன்புடன்

நாகூர் கவி.

comments | | Read More...

வெட்கப் பட்டன vetkappattana tamil kavithaigal

வெட்கப் பட்டன

News UpdatesToday

உன் வரவிட்காய் ஏங்கிய 
என் நீண்ட இரவுகள் 
                     நிசப்தமாய் கரைந்தன 
நீ வந்த நிமிடங்கள் உன் மகிலவாள் 
வார்த்தைகள் வர மறுத்தன !
                                     இதழ்கள் விரிய
மறுத்த போது உன் இதழ்கள் 
பற்றிக் கொண்டது 
               நீண்ட இரவுகளின்
ஏக்கங்களைத் தணிப்பதில் 
இதழ்கள் போட்டியிட்டுக் 
                              கொண்டன
ஏக்கங்கள் தனிந்த
                     இரவின் 
தூக்கம் தொலைந்து 
                          கொண்டது!
ஏக்கம் தணிந்த 
                  மகிழ்வு
இருவருக்கும் இரவவென்ன 
                                   வெட்கப்படுமா?
ஆனால் வெட்கப்பட்டன 
விடிந்து கொண்டதில் 
                 தனியே உடைகள்!
Show commentsOpen link

comments | | Read More...

அவளுக்காக ஓர் கவிதை avalukkaga oru tamil kavithai

Penulis : Tamil on Saturday, September 14, 2013 | 2:25 PM

Saturday, September 14, 2013

அவளுக்காக ஓர் கவிதை

உன்னை பார்க்கும்போது 
என் கண்ணுள் ஆயிரம் வாட்ஸ்  பல்பு  எறிகிறது

அவள் அவளை பற்றி கவிதை ஒன்றை எழுத சொன்னால் 
கவிதையை பற்றியே கவிதை சொல்ல 
நான் ஒன்றும் கீட்ஸ் இல்லை ..

உனக்காக தொடங்குகிறேன் என் கவிதை பயணத்தை 
பயணத்தில்  பூ வாய்  கிடைத்த வார்த்தையை வைத்து 
கோர்க்கிரேன் ஓர் அழகு மாலையை உன்னகாக ..

கவிதையை தேடி தொடர்ந்த என் பயணம் 
முடிவில்லா பாதையை கொண்டிருகிறது
பாதையின் முடிவை நெருங்கும் போது 
கவிதை வருமா என்று தெரியாது 
கண்டிப்பாக 
காதல்  வரும்..!!!

Show commentsOpen link

comments | | Read More...

கல்லூரி தேவதை kalloori thevathai tamil kavithaigal

+காதலைக் கற்கப் போனால்...+

கல்லூரி சேர்ந்து நானும்
பாடமே படிக்க வந்தேன்!
எங்கூட படிச்ச நீயோ
காதலைச் சொல்லித் தந்தாய்!

கண்ணாடி பார்க்காத என்னை
கனவாலே மூழ்க டித்தாய்!
முன்னாடி தினமும் வந்து
முழுசாக சாக டித்தாய்!

பள்ளியில் முதலாய் வந்து
பாராட்டுப் பெற்ற நானோ
கள்ளியுன் கடைக் கண்ணாலே
கடைசிவரை தேர‌ வில்லை!

வருடங்கள் மூணும் ஆச்சு!
நொடியிலே ஓடிப் போச்சு!
பருவத்தில் வீழ்ந்த எனக்கு
அரியர்சால் மானம் போச்சு!

மயக்கிய அழகி நீயோ
மறக்காமல் படித்து வந்தாய்!
பல்கலை இறுதித் தேர்வில்
பாவைநீ பதக்கம் வென்றாய்!

உனக்காக அலைந்த என்னை
உதறிநீ விட்டுச் சென்றாய்!
அழகான ஒருவன் பார்த்து
அடக்கமாய் மணந்து கொண்டாய்!

நீயாகக் கெடுக்க வில்லை!
நானேதான் கெட்டுப் போனேன்!
நாயாக உன்னைச் சுற்றி
படிப்பையும் விட்டுப் போனேன்!

தேவதையாய் உன்னைத் தொழுதே
தேவையின்றி மாட்டிக் கொண்டேன்!
வதைக்கின்ற வாழ்க்கை வலையில்
வசமாக சிக்கிக் கொண்டேன்!

என்பெற்றோர் முகத்தில் நானே
கரியையே பூசி விட்டேன்!
கண்கெட்ட பிறகு இன்றோ
மனம்மாறி யோசிக் கின்றேன்!

கல்வியைக் கற்கும் வேளை
கல்வி மட்டும் கற்றிடுவோம்!
காதலைக் கற்கப் போனால்
நல்லப் பாடம் பெற்றிடுவோம்!
Show commentsOpen link

comments | | Read More...

உன் புன்னகையில் un punnakai tamil kavithai

உன் புன்னகையில்

உன்னை நினைக்கும்போது 
எல்லாமிருந்தும் 
எதுவுமில்லாததொரு உணர்வில் 
உருகிப் போகிறேன் .........!

புரிதலின்றிய உனக்கு 
ஒவ்வொரு தடவையும் 
புரியவைத்துப் புரிய வைத்தே 
தோற்றுப் போகிறேன் ......!

உன் வாழ்வை வெளிச்சமாக்க  
மெழுகுதிரியான என்னை 
சூனியத்துள் தள்ளிவிட்டு 
உன்னுள்ளே சிரிக்கின்றாய் ...!

விளம்பர வெளிச்சம் தேடி 
நீயும் 
அடையாளம் தெரியாத 
பிணமுமாய் நானும் 
வாழ்தலை எண்ணி 
நொந்து கொள்கிறேன்............!

வேண்டியபோது 
கிடைக்காத உன்னன்பு 
வேண்டாதபோது 
தேவையில்லை எனக்கு
உன் நினைவுகளே போதும்....!
------------------------------------------------------------------
தமிழின் தோழி (யாழ்)

comments | | Read More...

மனதிலும் நினைக்காதே நண்பனே! தோழியே! Tamil kavithaigal

மனதிலும் நினைக்காதே நண்பனே! தோழியே!

உனக்காகவே துடிக்க உன் இதயமும்
உனக்காகவே சுவாசிக்க உன் நுரையீரலும்
உனக்கு பசிக்காமலும்,
உனக்கு கண்ணாக பார்த்துக்கொள்ள 
உன் அம்மாவும் 
உன்னை உருவாக்க ஓயாமல் உழைக்க 
உன் அப்பாவும்
எத்தனை அழுக்கனாலும் உன் உடையை 
உடனே துவைத்து கொடுக்கும் அன்பான அக்காவும்
எத்தனை முறை திட்டினாலும்
உன்னை மற்றவர்களிடம்
விட்டுகொடுக்காத அண்ணனும் 
எத்தனை முறை திட்டினாலும்
எத்தனை முறை அடித்து கொண்டாலும்  
என் அண்ணன்! என் தம்பி!
என் அக்கா! என் தங்கை!
என் எப்போதும் மெச்சிகொள்ளும்
உறவுகளும்,
நீ இருக்கும்போது 
உன்னை கலாய்த்து....
நீ இல்லாதபோது
உன்னை துளியும் விட்டுகொடுக்காத
நண்பர்களும் இருக்கும்போது 
யாரோ ஒருத்திகாக
யாரோ ஒருவனுக்காக
மதிப்பெண் என்ற - நாளை
மக்கிபோகும் காகிதத்திற்காகவும்
மண்ணாய் போக - உன் 
மனதிலும் நினைக்காதே 
நண்பனே! 
தோழியே!

comments | | Read More...

காதலித்து பாருங்கள் kathalithu paarungal tamil kathal kavithaigal

Penulis : Tamil on Friday, September 13, 2013 | 7:57 PM

Friday, September 13, 2013

காதலித்து பாருங்கள் ........

by (உமா சிவா )
RSS 2.0 - News UpdatesToday,

அநேக ஆண்களுக்கு 
காதல் மனைவி 
காவிய தலைவியாய்,
சரித்திர நாயகியாய்
இருக்க வேண்டும் 
என்று தான் ஆசை.
இராமனுக்கு சீதையாய்
நளனுக்கு தமயந்தியாய்
சத்தியவானுக்கு சாவித்திரியாய்
மங்கையர் வேண்டுமென்று 
பலர் கேட்டால்
என்னை விரும்ப நினைப்பவனே !
வள்ளுவனுக்கு ஒரு வாசுகியாய்
நான் வர வேண்டுமென்று 
நீ கேட்கிறாய் ...........
வள்ளுவன் எழுதிய 
1330 குறள்களை
ஆறுதலாய் வாசிக்கவே 
பொறுமை இல்லாத உனக்கு 
நான் வாசுகியாய் 
வருவது எப்படி ......?
ஆண் குலம் இப்படியே எதிர்பார்த்தால்
சேவைக்கு ஒரு மணிமேகலையாய் 
முதுமைக்கு ஒரு ஒளவையாய் 
பெண்ணினம் புறப்பட்டு விடும் .
நீங்களும் மனிதர் 
நாங்களும் மனிதர் 
மனிதபெண்ணை மனிதனாய் இருந்தே 
காதலித்து பாருங்கள் ........
நம் மனிதக் காதலும் 
என்றாவது ஒரு நாள் காவியமாகும் ....................

comments | | Read More...

ஒரு ரோஜா A roja tamil kathal kavithai

ஒரு ரோஜா

ஒரு ரோஜா கொடுத்து 
என் காதலை சொன்னபோது 
நீ ஏற்றுக் கொள்ளவில்லை 

இப்போது காக்கை,குருவி 
வந்து முத்தமிட்டு செல்லும் 
என் கல்லறையில் 
கூடை கூடையாய் 
வாசமிகு பூக்களை கொட்டுகிறாய்...

இதுவும் சுகம்தானம்மா..
என் ஆத்மாவிற்கு....
இதற்காவது என் உயிர் பிரிந்ததே...
Show commentsOpen link

comments | | Read More...

காதல் மைதானம் kathal maithaanam

காதல் மைதானம்

உன் விழிகள்
பந்தாடும்
காதல் மைதானம்
என் இதயம்...!

comments | | Read More...

அழுது தொலைக்கிறேன்....! Alukai tamil kavithaigal

அழுது தொலைக்கிறேன்....!!!

by (கவிஞர் K இனியவன்)

பிரிய நினைக்கிறாய் பிரிந்து 
விடு - உனக்கும்  சேர்த்து 
இதுவரை காதலித்த நான் 
உனக்கும் சேர்த்து  அழுது 
தொலைக்கிறேன்....!!!

comments | | Read More...

என் மூச்சையும் கலந்துவிடு ! En mootchu tamil kavithaigal

என் மூச்சையும் கலந்துவிடு !

காற்றே எனக்கு உதவி செய் 
என் காதலியின் மூச்சோடு 
என் மூச்சையும் கலந்துவிடு ...!!!

கலந்த மூச்சே எனக்கு ஒரு 
உதவிசெய் கலந்த அவள் 
இதயத்தில் எங்கிருக்கிறேன் 
என்று கண்டுபிடி ....!!!

comments | | Read More...

sweet magic of love

Penulis : Tamil on Wednesday, September 11, 2013 | 10:41 PM

Wednesday, September 11, 2013

 
It is called the sweet magic of love,
That makes you feel you're in heaven above



comments | | Read More...

இதயம் வலிக்கிறது ithayam valikkirathu

Penulis : Tamil on Sunday, September 8, 2013 | 10:00 AM

Sunday, September 8, 2013

காத்திருந்தேன் கால்
வலித்தது பொறுத்து
கொண்டேன்...!!!
காத்திருந்தேன்
கண் வலித்தது
பொறுத்து
கொண்டேன்...!!!
என்னை விட்டு
பிரிந்து விட்டாய்
இதயம் வலிக்கிறது
பொறுக்க
முடியவில்லை....!!!

comments | | Read More...

மனதுக்குள் பலமுறை ...!!! Tamil kavithai manathukkul palamurai


என் வீட்டு மல்லிகை
எத்தனை முறை பூத்தாலும்
வாசமில்லை ...!!!
என் வீட்டு அழைப்பு மணி
எத்தனை முறை அடித்தாலும்
பதட்டமில்லை ...!!!
எப்போது நீ வருவாய் என்று
சொல்கிறாயோ அப்போது
மல்லிகை வாச தொடங்கும் ....!!!
அழைப்பு மணி எப்போது
அடிக்கிறதோ இல்லையோ
மனதுக்குள் பலமுறை
அடித்துவிடும் அழைப்பு மணி ....!!!

comments | | Read More...

அழகுப் புன்னகை azhaku punnakai

Penulis : Tamil on Friday, September 6, 2013 | 5:55 PM

Friday, September 6, 2013

தமிழால் இணைவோம்:
இதயத்தில்
காதலை ஊற்றி
இதழ்களை அதில்
அமிழ்த்தி
அமிழ்தெடுத்து..........

சின்னஞ்சிறு
தூரலாய்
வீசிய உன் இனிமை
அழகுப் புன்னகை .........

அது
வானம் பார்த்த
பூமியாய்
உன் விழி பார்த்து
காத்துக் கிடக்கும்
என் காதலுக்கு
கனமழை .........

வறண்ட மனதில்
திரண்டு ஓடுகிறது வெள்ளம்
நெல் நாற்றாய்
சொல் நாற்று நட்டு
காதல்
அறுவடை காண
ஆயிரம் கனவுகளோடு
நான் .........


ஆடைகளைந்த
நெல்
அரிசியாவதுபோல்
நம் மனம் களைந்து
சொல்லும்
காதல்
யாவர்க்கும்
அதிர்ச்சியாகக் கூடும்;
முதிர்ச்சிவரை
கதலாவோம் வா..............

ஆயிரம் ஆயிரம்
சமூக முட்களின்
சா''தீயக் கீறல்களுக்கு
மருந்திடுவோம்

உலகே எதிர்த்தாலும்
ஏற்க மறுத்திடுவோம்
மலர்ப் புன்னகையோடு வா ....

-அன்புடன் சீர்த்தி

comments | | Read More...

காதல் செய்யாதீர்கள் kathal seyyathe

Penulis : Tamil on Wednesday, September 4, 2013 | 6:01 PM

Wednesday, September 4, 2013

விழியால வலை போடுவா
நீ விழுந்துப்புட்டா
அதுல அலையாடுவா...
விரலால சைகை செய்வா
நீ மாட்டிக்கிட்டா
உன் கை ரேகை தேய
தினம் கவித எழுதுவா...
பூ இதழால
மெல்ல சிரிப்பா
நீ கவிழ்ந்துப்புட்டா
காதல் பள்ளத்துல கெடப்பா...
சின்ன சின்ன சிரிப்பை
மறுபடியும்
சில்லறையா தருவா
உன் வாழ்க்கையை
செல்லாத காசாக்க...
அவள் பின் தொடர்ந்து
நடக்க வைப்பா
நாளை உன்னை
செல்லாத காசாக்க...
நிச்சயமா
ஒண்ணத்தான் விரும்புவா
நிச்சயத்தை மட்டும்
வேறொருவனுடன் விரும்புவா...
அம்மா அப்பா
மிரட்டுனாங்க
மாறிபுட்டேன் என்பாள்...
ஐயோ என் காதலு
தோத்துப்போச்சு
நீயும் கிழிஞ்ச கீற்றுப்
போல ஒடிவா...
தாடி வச்சி
தெரு வீதியிலே அலைவா
காதல் போதையத்தான்
மறக்க நீயும்
இனி பாரு பக்கம் செல்வா...
மாது போதையோடு
மது போதை கூடவே
வாழ்க்கை தாறுமாறாய் போகுமே...
இனி உன்னைப் பார்க்க
நாதி இல்லை ஆகுமே...
இந்த நிலை வேணுமா
பொம்பள மேல
காதல் இனி தோணுமா...
பதினாறு வந்துப்புட்டா
காதல் தகராறு செய்யுமட
அதனை நீயும் தடுத்துப்புட்டா
உன் ஆயுள் நீளுமடா...!
அன்புடன்
நாகூர்வ் கவி.

comments | | Read More...

இரு கண்கள் தூங்காது iru kangal thoonkathu

Penulis : Tamil on Tuesday, September 3, 2013 | 6:43 PM

Tuesday, September 3, 2013


காதல்
ஜெயித்தால் மட்டும்
அல்ல
தோற்றாலும்
கண்கள்
தூங்காது...காரணம்
புரிந்தும்
புரியாமலும்
இணையாமல்
இமைகள்
இம்சையை
அனுபவிக்கிறதே....?

comments | | Read More...

அபலை apalai tamil kavithai


நான் பிறந்தேன் -நீ
   என்னை யார் என்று
   அறிய வில்லை
   என் உறவுகளை
   இழந்தேன் -நீ
   ஆறுதலும்  சொல்ல வில்லை
  ஒரு வேலை உணவின்றி
   வீதியில் கிடந்தேன்
   நீ  ஏறெடுத்தும்
   பார்க்க வில்லை
   ஆனால், இன்று
    என்  அலைபேசியில்
    வாரம் தவறாமல்
   உன் அழைப்பு
   என் வங்கி  கணக்கில்
   மூன்றில் ஒரு பாதி
   உன் இருப்பு
   குழந்தையாய்  இருந்த போது
   என் மீது  கருணை
   கொள்ளாமல்
   குமரியை  மாறியதும்
   என்  மீது  காமம்  கொள்கிறாயே
   என் அடி வயிற்றில்
  உன்   கருவட
   அதை வாய் குசாமல்
   வேசி மகன் என்கிறாய் ........
  தவறி விழுந்ததால்  நான்
   அபலை  என்றால்
  என்னை தவற  வைத்த
  உன்னை நான்
  என்னை வென்று அழைப்பது............

comments | | Read More...

நட்பு natpu or friendship

Penulis : Tamil on Monday, September 2, 2013 | 11:39 PM

Monday, September 2, 2013


நட்பு என்ற  நிறம் எடுத்து  வானில்
   வீசினேன் அடடா
  அது வானவில் ஆனது .......
  நட்பு என்ற காற்றெடுத்து
  மூங்கிலில்  ஊதினேன்
  அடடா அது மெல்லிசை யானது .......
  வீட்டிற்கு உள்ள சோகமும்
   நட்பிற்கும் மறந்து போய்விடும்
  காதலின்   ரணத்தை கூட
  நடப்பு மாற்றி விடும் .......
  தினம் தினம் எத்தனையோ
  அரட்டைகள் .......
  மட்டிகொண்டலும்   காட்டி
  கொடுக்காமல்
  தண்டனை ஏற்கும் கடவுள்கள்
  நண்பர்கள் .........
  பயம் என்ற ஒன்று வரும் முன்னே'
  தோளில்  கை போட்டு
  தைரியம்  சொல்வது தான் நட்பு........
  அன்னையிடம் கூட மறைக்க தோன்றும்
  நட்பிடம் எல்லாம் உரைக்க  தோன்றும்
  பிரிவு கூட சோகம் தான்
  நட்பின் நினைவு  உடன்னிருகையில் ....
  காலங்கள்  ஓடிபோகும்
  பருவங்கள் மாறி போகும்
  குடும்பம் ஒன்று வரும்
   உறவுகள்  ஆயிரம் வரும் ......
  ஆயினும்  அடி மனதில்
  வாழும் சொந்தம் நட்பு
  மட்டுமே
  பழைய புகைப்படம்
  அதில் நண்பர் பட்டாளம்
  துடைத்து  வைக்கையில்
  தானாய்  கலங்கும் விழிகள்
  தன்  பிள்ளைக்கு சோறு ஊட்டுகையில்
  தன்னை  பிள்ளையாய்  நினைத்து
  சோறு  ஊட்டிய  தோழி என்னும்
  அன்னையின்  நியாபகம் .........
   அங்கங்கே வாழ்ந்த போதும்
   நினவு உலகில் என்றும் ஒன்றாய்.
  மரண படுக்கையில்  இருக்கும்போதும்
  மனதில் இளமையும்
  இதழில் புன்னகையும்
  தருவது  "நட்பு" மட்டுமே
.............
               நட்புடன்
                   நிலா மகள

comments | | Read More...

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் tamil padal varigal

தமிழால் இணைவோம்:
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
.பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன்
கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான்
உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி!

இனிய இரவு வணக்கம் நண்பர்களே!

comments | | Read More...

பார்க்காதே...

Penulis : Tamil on Sunday, September 1, 2013 | 6:11 PM

Sunday, September 1, 2013


நீ குனிந்து
மண்ணை பார்க்கையிலே
நான் விண்ணில்
பறக்கிறேன்...
நீ
என்னை
உற்றுப் பார்த்தால்
காதல் அணுகுண்டால்
தகர்க்கப்படுவேன்...
அன்புடன்
நாகூர் கவி.

comments | | Read More...

உன் மௌனம் என் நெஞ்சில் பாரமடி en nenjil paaramadi


உயிரே...
தென்றல் மெல்ல
வீசுவதை போல...
சில நேரங்களில்...
என் மனதுக்கு
நெருக்கமாய் வருகிறாய்...
சில நேரங்களில்
சூறாவளியாய் வந்து...
வேதனை
தருகிறாய்...
நான் உன்னை மறக்க
வேண்டும் என்றா...
பெண்ணே...
மண்ணில் நான்
வாழும் காலம் வரை...
என்னில் உன் நினைவுகள்
இருக்குமடி சுகமாக...
என்னை வெறுத்து
சென்றாலும்...
உன்னை வெறுக்க கூட
என் மனதுக்கு
தெரியவில்லையடி...
பொய்யாக கூட...
முடிந்தால் சூறாவளியாய்
இருந்துவிடு...
தென்றலாய்
மாரிவிடதே...
அப்போதும் உன்னைத்தானடி
நான் சுவாசிப்பேன்...
பெண்ணே.....

comments | | Read More...

உன் நினைவுகள் un ninaivugal

பல கலை படைப்புகளை தாங்கும் பூமி
இடை கூடியபோதும் கவிழ்ந்ததில்லை...
கலை அதிசயமாக நீ சென்றால்
கவிழுமோ இந்த பூமி!!

நீ தொட்ட பாறை
பருத்தியில் பூத்த பஞ்சாகும் - நீ
நடந்து சென்ற பாதை
கால் புதையும் மணலாகும் (மென்மை)
நீரின்றி பூக்காது - நீ
சூடும் பூ வாடாது....
உன் பின்னிய கூந்தல்
லோலகம் போல் - ஆடும்
என் உயிரோ ஊசல்......

மேகத்தை குடையாக்கி
என்னை நிழலாக்கி
நிழலின்றி செல்வாயே
நீயின்றி நானில்லை
செதுக்கப்பட்ட உன் இரு கண்களில்
கண்ணாடியென கரு விழிகள்
உன்னுள் எனை கண்டேனடி தோழி
உன் மெல்லிடை மேனி வீசும் ஒளியால்
மேகத்தின் இடை சூரியன் ஒளியும்
அதிசயம் காண்கிறேன்.....

நீ கண்மையிட்டதால்
பெருமையில்  கருமை
பொறாமையின்றி கருத்து மின்னும்
உன் அளவான
அழகு புன் சிரிப்பும் வெள்ளை பற்களும்
முகத்தில் ஜொலித்தது
தங்கத்தில் வைரம் பதித்த நகையென
உன்னை சுற்றி வந்து
உன் மார்பில் விழ
நைந்து போன - நூல்
பெருமூச்சு விட்டது
சேலையாய் நீ அணிந்த பிறகு
கை பிடித்து செல்வாயோ
கண்மூடி நான் வருவேன்
ஏழு கடல் கடந்து  - உன்
இதய வாசல் அடைவேன் ....

தட்டுங்கள் திறக்கப்படும்
தட்டாமலே திறந்தாயே
கேளுங்கள் கொடுக்கப்படும்
கேட்காமலே கொடுத்தாயே
உன் இதயத்தில் ஓர் இடம்......

உன் நினைவுகள் என்னை
கடக்கும் போதும் கடத்தும் போதும்
நான் மோட்சம் பெறுவேன்....

comments | | Read More...

Popular Posts

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. KATHAL VARIGAL . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger