+சொல்லசொல்ல வலிக்குதடி!+
by (அ வேளாங்கண்ணி)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )
போகும்வழி எங்கும்வந்து
ஒளியைப்போல் நின்றிருப்பாய்!
போனதெங்கே சொல்லாமல்
கும்மிருட்டில் தள்ளிவிட்டு!
நினைவுகளில் புகுந்துகொண்டு
நித்தமென்னை சுற்றிவந்தாய்!
கனவும்காண வழியுமின்றி
தூக்கத்தையும் சுருட்டிசென்றாய்!
துக்கம்செய்ய வந்தாயோ!
துரோகம்செய்ய வந்தாயோ!
சுக்குநூறாய் நொறுக்கியெனை
துண்டுபோட வந்தாயோ!
நிலவென நினைத்திருந்தேன்
நிலவைப்போல் மறைந்துவிட்டாய்!
உறவென நினைத்திருந்தேன்
உறவைப்போல் பிரிந்துவிட்டாய்!
உயிரென நினைத்திருந்தேன்
அதுபோகும்வலி கொடுத்துவிட்டாய்!
இன்னுமென்ன நானும்சொல்ல
சொல்லசொல்ல வலிக்குதடி!
Show commentsOpen link
Post a Comment