காதல்
by (esaran)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )
காதல் எனும் மூன்றெழுத்து மந்திரம்
ஈரேழு லோகத்தையும் ஆட்டுவிக்கும்
காரணம் யாரரிவாரோ ?...
இரு விழி கலந்து இதயத்தில் நிறைந்து உயிராய் உறைந்து போகும் காதல் -
இதன் இடை புகுந்து மாற்றம்
கொணர … யாரரிவாரோ ?...
ஜனனம் தொட்டு மரணம் வரை
பயணம் செய்யும் காதல்
இதனை களைத்துவிடவும்
தொலைத்துவிடவும் யாரரிவாரோ …?
மண்ணில் பிறந்த மணித்துளி தொட்டு மரணம் தரிக்கும் மணித்துளிவரை
மறந்து போகா காதல்
இதனை அழித்துவிடத்தான் யாரரிவாரோ …?
காயமே இது பொய்யடா வெறும் காற்றடித்த பையடா என கவிஞர் சொல்லிபோனதுண்டு …
இது காற்று மட்டும் அல்ல காதலும் சேர்த்து அடித்த பையடா ….
என மாற்றி சொல்ல யாரரிவாரோ
Show commentsOpen link
Post a Comment