கண்சிமிட்டுகளை காண்பதற்கு
உன்
கண் சிமிட்டுகளை காண
காத்திருந்தேன்
ஆனால்
ஆண்டுகள் பல முடிந்தும்
அதை
பார்க்க முடியவில்லை
அப்போது
நீ சொன்னாய்
என்
கண்ணுக்கு கூட
உன் காதல்
தெரிந்து இருக்கிறது
அதனால் தான்
சிமிட்டிவிட்டால்
சில நிமிடத்தில் சென்றுவிடுவாய்
இல்லாவிட்டால்
இறக்கும் வரை
இப்படியே
என்னை
பார்த்து கொண்டு
இருப்பாய் என்று தான்!
அது
அப்படி செய்து
இருக்கும் என்று
என்னைப்பார்த்து
சிரித்துக்கொண்டே சொல்கிறாள்…
shared via
Post a Comment