News Update :
Powered by Blogger.

நீங்கள் காதலித்தது உண்டா ?

காதல் கடலில் குளித்தேன் kahal kadal tamil kavithai

Penulis : Tamil on Tuesday, October 29, 2013 | 3:41 PM

Tuesday, October 29, 2013

காதல் கடலில் குளித்தேன்

நான்
கவலை சேற்றில்
கிடந்தேன்...

அவள் 
கை கொடுத்ததால்
இன்று
காதல் கடலில் குளித்தேன்...!

shared via

comments | | Read More...

அவளுக்கு என்று avalukku entru yaarum illai tamil kavithai

Penulis : Tamil on Sunday, October 27, 2013 | 5:15 PM

Sunday, October 27, 2013

அவளுக்கு என்று

அவளுக்கு
என்று
யாரும்
இல்லை....என்னைத்
தவிர
எனக்கும்
தான்.....!

சம்மதம்
கேட்டு
வளர்ந்த
காதல்
சந்தோஷமாய்
போகிறது
காதலுடன்.....!

அன்பே
சுஜா....ஆயிரம்
முத்தங்களை
அள்ளிக் கொடுக்கிறேன்
அத்தனையும்
எனக்கு
வேண்டாம்....ஒரு
முத்தம் 
தருகிறேன்
என்றாலே
மனம்
மகிழுமடி.....!!

shared via

comments | | Read More...

என்னை போலவே கடலலையும் kadalin kathai tamil kavithai

என்னை போலவே கடலலையும்

என்னை போலவே கடலலையும்

தன்னவளிடம்   காதல் சொல்ல 

வந்து வந்து போகிறது 

சொல்லாமலேயே ...

shared via

comments | | Read More...

கொசுக் கடி tamil kavithai kosukkadi

கொசுக் கடி

நம்புங்கள்,
அவள் கொசுவைதான் 
அடித்தாள்;

அது என் கன்னத்தில் இருந்தது.

shared via

comments | | Read More...

சிறு இடைவெளி siru idaiveli tamil kavithai

Penulis : Tamil on Saturday, October 26, 2013 | 5:58 PM

Saturday, October 26, 2013

சிறு இடைவெளி

உன்னை
 மறக்க முடியாதவனாய்
உன்னிடம் இருந்து 
விலகி செல்கிறேன் காதலி
உனக்கு எந்த விதத்திலும் சுமையாய் இருக்க விரும்பவில்லை
உலகின் 
ஏதோ ஒரு மூலையில்
மாறாத காதலுடன் 
உனக்காக காத்திருப்பேன்
இது 
நீ என்னை 
புரிந்து கொள்வதற்கான
சிறு இடைவெளி தான்
 பிரிவு அல்ல .....

காதலுடன்புனிதன்.இ

shared via

comments | | Read More...

கண்சிமிட்டுகளை காண்பதற்கு kan simittigal tamil kavithai

கண்சிமிட்டுகளை காண்பதற்கு

உன்
கண் சிமிட்டுகளை காண
காத்திருந்தேன்
ஆனால்
ஆண்டுகள் பல முடிந்தும்
அதை 
பார்க்க முடியவில்லை
அப்போது
நீ சொன்னாய்
என் 
கண்ணுக்கு கூட
உன் காதல் 
தெரிந்து இருக்கிறது
அதனால் தான்
சிமிட்டிவிட்டால்
சில நிமிடத்தில் சென்றுவிடுவாய் 
இல்லாவிட்டால்
இறக்கும் வரை
இப்படியே 
என்னை
பார்த்து கொண்டு 
இருப்பாய் என்று தான்!
அது
அப்படி செய்து
இருக்கும் என்று
என்னைப்பார்த்து
சிரித்துக்கொண்டே சொல்கிறாள்…

shared via

comments | | Read More...

வெளிச்சம் velitcham tamil kavithai

Penulis : Tamil on Friday, October 25, 2013 | 9:28 AM

Friday, October 25, 2013

வெளிச்சம்

தெரியாது...
என்ற வார்த்தையோடு
ஒரு உரையாடலை
நான் முடித்துக் கொள்ள
நினைக்கையில்
ஏன் தெரியாது
என்று கேட்டு
எப்போதும் யாராவது
தொடங்கி விடுகிறார்கள்
அர்த்தமற்ற வார்த்தைகளின்
அணி வகுப்புக்களை!

அறிந்திராத பக்கங்களை
எல்லாம் நுனி மடக்கி
யாராவது வாசிக்கச் சொல்கையில்
வேண்டாம் என்று...
உதடு பிரிக்கும் முன்பு
மனம் அவற்றை...
எட்டி உதைத்து நிராகரித்து
தூர தள்ளிதான் விடுகிறது..!

முக ஸ்துதிகளின்...
நச்சு முனைகளை
ஒடித்து குப்பையில் எறிந்து
மெல்ல சுருண்டு ஒதுங்கி
ஒடுங்கிக் கொண்டு
ஜன்னலோரப் பேருந்தில்
வேடிக்கைப் பார்க்கும்
முகமற்ற பயணியாய்
எப்போதும்
பயணிக்கிறது மனது!

அறிவின் கனத்தை
கழுத்தில் மாட்டிக் கொண்டு
ஆணவ இரைச்சலோடு
வருபவர்களை
எல்லாம் தூர நிறுத்தி
திருப்பி அனுப்பி
புன்னகையோடு வரும்
மனிதர்களை மட்டும்
சேர்த்துக் கொண்டு
வார்த்தைகள் இல்லாமல்
என்னோடு வாசம் செய்யுங்கள்
என்ற கட்டளையை
கண்களால் இட்டு பகிர்தலாய்
நகர்கிறது என்
இருட்டு பொழுதுகள்!

shared via

comments | | Read More...

சொர்க்க வாசல் sorkkavasal tamil kavithai

சொர்க்க வாசல்

சும்மா இருந்தவனை 
சுருங்கிக் கிடந்தவனை 
முத்தம் கொடுத்ததனை 
இருகரம் பிடித்ததனை 
சுறுசுறுப் பூட்டிட 
சூடு அவள் ஏற்றினாள் 
சுடுநீர் சுற்றிலும் 
கொட்டிட வேண்டியோ 
விந்து அது சிந்த 
குறுகிய கோல் அதைக் 
கண்டவள் சிணுங்கி 
வாடிநீ நின்றால்   
அல்குல் அதனுள் 
அவன் நுழைவானோ 
சிணுங்கிய மங்கை 
கொங்கை இரண்டின் 
கூர்முனை கொண்டு 
நெஞ்சில் குத்திட
முனைந்தாள் 
கட்டி அவனை 
முத்தம் சொரிந்து 
சுண்டு விரலால் 
சுட்டிக் காட்டிட 
செவ்விதழ் திறந்தது 
நடு யிடை மலரும்  
இருவர் திசையும் 
எதிர் எதிர் ஆக 
சொர்க்கக் கதவில்   
அவன்நா உரச 
ஆஹா ஓஹோ என 
அவள்வாய் மொழிய
அவனுள் இருந்த  
ஆசை மீண்டும் 
துள்ளி எழுந்தது 
செங்கோல் புடைக்க   
சொருகிட முனைந்தான் 
அல்குல் அதனுள் 
மெள்ள மெள்ள
இறக்கைகள் விரித்து 
இருவரும் எங்கோ 
விரைந்தனர் வானில்

shared via

comments | | Read More...

முதல் இரவு first night tamil kavithai

முதல் இரவு

கைத்தலம் பற்றியதும் 
வலைத்தளம் வழியே 
வாழ்த்துக்கள் வந்து 
குவிந்து கொண்டே இருக்க  
இரவு முழுதும் கண் மலர்ந்து 
இருவரும் அருகில் 
அமர்ந்திருக்க 
கைபேசி திறந்து 
ஒன்றொன்றாய் படிக்க 
பொழுதும் புலர்ந்தது !!

shared via

comments | | Read More...

கவிதையே சுவாசம் suvasam tamil kavithai

Penulis : Tamil on Thursday, October 24, 2013 | 4:28 PM

Thursday, October 24, 2013

கவிதையே சுவாசம்

கனவிலே வாழ்ந்து பார் 
கவிதையே சுவாசம் 

கவலையில் வாழ்ந்து பார் 
சுவாசமும் மோசம்....!

shared via

comments | | Read More...

தனிமை thanimai tamil kavithai

தனிமை

பெண்ணே 
நான் இறந்த பின்பும் 
என் இதய 
நினைவு மட்டும் 
உனக்காக காத்திருகிறது.
என்றும் போல 
தனிமையில்

shared via

comments | | Read More...

நிரந்தரம் Nirantharam tamil kavithai

நிரந்தரம்

நீ எனக்கே நிரந்தரம் !
என்றாலும்,
நான் நிரந்தரம் இல்லையே,
இந்த பூமிக்கு !
நாம் ஏன் நம் காதலை,
நிரந்தரப்படுத்தக்கூடாது?
பேசாமல்.................
சிலுவையில் அறைந்து,
கடவுளாக்கிவிடலாமா அதை?

shared via

comments | | Read More...

நிழலாய் நான் காத்திருக்கிறேன் kathirukkiren tamil kavithai

நிழலாய் நான் காத்திருக்கிறேன்

குழந்தைப் போல் பேசிடும் 
உன் இதழ் வார்த்தை இனி என் செவி கேட்க்கும் எப்போதோ 

நான் பார்த்த என் அன்பு உள்ளம் 
என்னை தனியே  தவிக்க விட்டு போனதேனோ 

என் இதயம் தேடிய என் தாரகையின் 
இதயத்தில் இனி எனக்கு இடமேதோ 

அன்பே ஒரு மலர்க் கொண்டு 
என்னை காணவா  கடைசியாக

நான் உன்னை காண காத்திருக்கிறேன் கல்லறையில் நிழலாய்.

shared via

comments | | Read More...

கண்ணீர் kanneer tamil kavithai

கண்ணீர்

அவளை நினைக்கும் போதெல்லாம் 
கண்களில் கண்ணீர் 
காரணம் 
அவள் என்னை நேசிக்கவில்லை என்று அல்ல 
அவளிடம் பேசி பல நாட்கள் ஆகிவிட்டன
இந்த நிமிடமும். . .....

shared via

comments | | Read More...

காதலி நிலா ....! Kathali nila tamil kavithai

Penulis : Tamil on Wednesday, October 23, 2013 | 8:41 AM

Wednesday, October 23, 2013

காதலி நிலா ....,!

காதலியை  
நிலா  என்றேன் !
அம்மாவாசையை 
தரிசிக்கிறேன் !

நட்பில்  nashe

shared via

comments | | Read More...

என் காதலிக்கு ஒரு கவிதை kathalikku oru kavithai

Penulis : Tamil on Tuesday, October 22, 2013 | 10:19 PM

Tuesday, October 22, 2013

என் காதலிக்கு ஒரு கவிதை

உன் மை வைத்த விழிகள் 
என்ன மாயம் செய்தனவோ 
எப்போதும் உன்னையே நான்  காண" 

உன் மழலை போச்சு 
என்னை மயக்கி போனதே 
என் மனதை 
அத்தோடு அழைத்துப் போனதே" 

அளவில்லா உன் அழகு 
என்னை ஆட்டிப்படைக்குதே,  

தெளிவில்லா உன் நிழலை 
என் கைகள் கட்டி அனைக்குதே, 

உன் சிரிப்பைப் பார்த்து 
என் சிரிப்பு தோன்றுதே! 

பெண்ணே என் மனதில் 
உனக்கொரு மாளிகை கட்டியுள்ளேன்் 
இதயம்  போல்  வடவமிருக்கும் 
அதில் என் உயிர் தொடிதுக்கொண்டிருக்கும் 
என்றென்றும் உனக்காக.

shared via

comments | | Read More...

இமைகள் ! imaigal tamil kavithai

Penulis : Tamil on Monday, October 21, 2013 | 7:57 AM

Monday, October 21, 2013

இமைகள் !

தூக்கத்தில் ,
இணைய துடிக்கும்,
காதல் ஜோடி!

shared via

comments | | Read More...

காரிகையின் கருங்கூந்தல் ...karikai tamil kavithai

காரிகையின் கருங்கூந்தல் ...

காரிகை இவளது
கார்முகில் கூந்தல்
கட்டிய அழகினை
காற்றும் வந்து
காதல் கொண்டு
கலைத்திடும் முன்னே
கட்டைத் தொட்டு
கைவிரல் எழுத
கவிதை ஒன்றை
கொண்டுத்திட 
முனைந்தேன்

தோகை  விரித்தாடும் 
மயிலும் திகைத்திடுமே
அழகிய மயில் இவள்
கூந்தல் விரித்தாட

shared via

comments | | Read More...

முத்தம் mutham tamil kavithai

Penulis : Tamil on Saturday, October 19, 2013 | 9:11 AM

Saturday, October 19, 2013

முத்தம்

காதலன் எத்தனை
பரிசுகளை 
வாங்கிக் கொடுத்தாலும்
காதலியின்
ஒரு முத்தத்திற்கு
ஈடாகுமா.....?

shared via

comments | | Read More...

இதய தானம் ithaya danam tamil kavithai

இதய தானம்

கேட்காமலேயே
இதயத்தை
தானமாகக் கொடுப்பது
காதலில் தான்...!

shared via

comments | | Read More...

எதை நோக்கி ..? Ethai nokki tamil kavithai

எதை நோக்கி ..?

Tamil kavithai

நாம் 
போகும் பாதை 
எதை நோக்கி ...?
பணத்தை நோக்கியா..?
புகழை நோக்கியா ..?
இன்பத்தை நோக்கியா ...?
பகட்டான வாழ்கையை 
நோக்கியா ...?
விலை நிலங்களை  நோக்கியா ....?
எதை நோக்கினாலும் 
மனிதர்களே ..!!!
நம்மை 
விடியலை நோக்கி 
அழைத்து செல்லும் 
வெளிச்சத்தை 
முதலில் 
தேடுங்கள் .....!!!!!

shared via

comments | | Read More...

அவள் கிடக்கிறாள் உலக அழகி.. uzhaga azhaki tamil kavithai

Penulis : Tamil on Friday, October 18, 2013 | 10:12 PM

Friday, October 18, 2013

அவள் கிடக்கிறாள் உலக அழகி..
Tamil kavithai

உலக அழகியே ஆனாலும்
உன்பாத அழகின்முன்
போட்டியிட முடியாது!
அதில் எனது
காதலும் அன்பும்
கலந்திருப்பதால்!

shared via

comments | | Read More...

காதல் நெருப்பு !! Kathal neruppu tamil kavithai

காதல் நெருப்பு !!

ஒரு கணம் உன்னில்
என்னைப் பார்த்தேன்!
மறு கணம் என்னில்
உன்னைப் பார்த்தேன்!
அக்கணம் காதல் பற்றிக்கொண்டது!

shared via

comments | | Read More...

மணப்பரிசு....manaparisu tamil kavithai

மணப்பரிசு.... manaparisu tamil kathal kavithai

அவளை மறக்கவும் 
மனமில்லை..,
இன்னொருவனுக்கு விட்டுக்கொடுக்கவும்
விருப்பம் இல்லை..
ஆதலால்,
விருப்பத்தோடு விடுகிறேன்....
என்னவளை அல்ல,
என் உயிரை...!

shared via

comments | | Read More...

காதல் தோல்வி kathal tholvi tamil kavithai

Penulis : Tamil on Thursday, October 17, 2013 | 8:59 PM

Thursday, October 17, 2013

காதல் தோல்வி
by kavitha

காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

வற்றியது நீர்
கண்களில்
தோழி கங்கைக்கு
காதல் தோல்வி...!

Show commentsOpen link

comments | | Read More...

காதலி கவனத்திற்கு kathali kavanathirku tamil kavithai

காதலி கவனத்திற்கு

by kavitha

நீ இல்லாத போது..........
மௌனமாய் மனதிற்குள் 
அடைக்கிவைத்த
அழுகை  எல்லாம் .........
அழுத்தம் தங்காமல் 
கண்ணீரை வடிக்கும் நொடியில்..... 
எனது கைகுட்டைகாவது
சொல்லி விடலாமா 
காரணத்தை.....

Show commentsOpen link

comments | | Read More...

கவிஞனாக வாழவைத்தவளே! Vaalavaithavale tamil kavithai

Tamil Kavithai


முதன்முதலில்
நான் கவிஞனானது
உன் பெயர் எழுதித்தான்..
முழுமுதலாக
நான் கவிஞனாகிவிட்டது
உன் காதல் எழுதித்தான்..
முழுமையாக
என் வாழ்வானது
உன் அன்பால் மட்டும்தான்..
comments | | Read More...

இரத்த தாணம் blood donation kavithai

Penulis : Tamil on Wednesday, October 16, 2013 | 8:43 PM

Wednesday, October 16, 2013

இரத்த தாணம் blood donation
by kavitha

இரத்த தாணம் செய்யுங்கள்
அதிவேக சாலையில் அல்ல
சாலையோர 
இரத்த வங்கிகளில்

Blood donation

comments | | Read More...

இதோ இதுதான் சொர்க்கம்.....! Ithuthan sorkkam

Penulis : Tamil on Monday, October 14, 2013 | 11:36 PM

Monday, October 14, 2013

இதோ இதுதான் சொர்க்கம்.....!

உன்னைப் புரிந்தால் 
உலகம் இனிது .

அன்பைப் பொழிந்தால் 
அகிலம் அழகு - நற் 

பண்பை வளர்த்தால் 
பூக்கள் மனது - இனி நீ 

பார்க்கும்  யாவும் 
நேர்மறை நினைவு

shared via

comments | | Read More...

பத்தோடு பதினொன்று pathodu pathinonnu tamil kavithai

பத்தோடு பதினொன்று
by kavitha

பெண்ணே!
உன் அன்பின் மொத்தத்தில் 
ஒரு பகுதியை மட்டும்
எனக்கு தந்துவிட்டு...

மற்ற பகுதிகளை 
பாகம் பிரிக்கிறாயே...
நானும் உன்னில்
பத்தோடு பதினொன்று தானே...
Show commentsOpen link

comments | | Read More...

காதல் கற்பனை அல்ல kathal karpanai illai

கற்பனை அல்ல
by kavitha

காதல்
என்பது
கண்ணில்
தொடங்கி
கண்ணீரில்
முடியும்
நாம்
கண்ட
நிஜம்....!

காதல்
என்பது
கற்பனை
அல்ல.....அது
விற்பனைக்கு
உரிய
பொருளும்
அல்ல....ஆனாலும்
பேரம்
பேசி..... பெருமை
பேசி....சாகடித்துப்
போகிறார்கள்
காதலின்
பெயரைச்
சொல்லி....காதலை.....!!

Show commentsOpen link

comments | | Read More...

என் தேவதையே en devadhaiye tamil kavithai

என் தேவதையே
By jasmin

எனக்கு என்று

வந்த தேவதையே

உன்னில் நான்

கறைந்து விட்டேன்

உன் கலை திறமையால்

என்னை சிற்பமாக்கி

உன் காதல் என்னும்

உயிர் கொடுத்து என்னை

கவிஞர்ஆக்கிவிட்டாய்........

shared via

comments | | Read More...

கண்களின் வார்த்தைகள் புரியாதோ! Kankalin vaarthaigal tamil kavithai

கண்களின் வார்த்தைகள் புரியாதோ!

காதலன் காதலிக்குத் தனது காதலைப் பல வழிகளில் தெரிவிப்பதுண்டு.

நமது நாயகன் தன்னுடன் படிக்கும் பெண்ணுக்குக் கேள்வி-பதில் பாணியில் அனுப்பிய கடிதம் இதோ..

அன்புள்ள ஆஷா,

நீ என்னைக் காதலிக்கிறாயா என அறிந்து கொள்ள சில கேள்விகளை அனுப்பியிருக்கிறேன். தவறாமல் பதிலளிப்பாய் என எதிர்பார்க்கிறேன்.

1. நீ வகுப்புக்குள் நுழையும்போதெல்லாம் உன் பார்வை என் மீதே விழுகிறது. காரணம்..

அ. என் மீது உனக்கு உள்ள காதல்
ஆ. உன்னால் என்னைப் பார்க்காமல் இருக்க முடியாது
இ. 'அப்படியா, நான் பார்க்கிறேனா என்ன?' என நினைக்கிறாய்

2. லெக்சரர் ஏதாவது ஜோக் சொல்லும்போது என்னைப் பார்த்தவாறே சிரிக்கிறாய்.

அ. நான் சிரிப்பதைப் பார்க்க உனக்குப் பிடிக்கும்
ஆ. நான் ஜோக்கை ரசிக்கிறேனா எனப் பார்க்கிறாய்
இ. நான் சிரிக்கும்போது உனக்கு வேடிக்கையாய் இருக்கிறது

3. நீ குழந்தையாக இருந்தபோது எடுத்த ஃபோட்டோவை உன் சினேகிதிகளுக்குக் காட்டிக்கொண்டிருக்கும்போது நான் வந்ததும் அதை ஒளித்தாய்

அ. உனக்கு வெட்கமாக இருக்கிறது
ஆ. தயக்கமாக இருக்கிறது
இ. காரணம் தெரியாது

4. நீ வகுப்பில் நண்பிகளுடன் பாடிக்கொண்டிருக்கும்போது நான் உள்ளே நுழைந்தேன். உடனே பாட்டை நிறுத்தி விட்டாய்.

அ. என்னெதிரில் பாடுவதற்கு உனக்கு வெட்கம்
ஆ. என்னைப் பார்த்ததும் திகைத்து விடுகிறாய்
இ. எனக்கு உன் பாட்டு பிடிக்குமோ, பிடிக்காதோ என்று பயம்

5. நீ அன்று மாடிப்படியில் தடுக்கி விழ இருந்தபோது நான் உனக்குக் கை கொடுத்தபோது கூட நீ என் நண்பனின் கையைத்தான் பிடித்துக்கொண்டாய்
அ. நான் ஏமாந்து போவதைப் பார்ப்பதில் உனக்கு ஒரு சந்தோஷம்
ஆ. என் கையைப் பிடித்தால் அப்புறம் விடத் தோன்றாது
இ. ஏனோ, காரணம் தெரியாது

6. நீ நேற்று பஸ்சுக்காகக் காத்துக் கொண்டிருந்தாய். னால் பஸ் வந்தபிறகும் ஏறவில்லை

அ. நான் வரவேண்டும் எனப் பார்த்திருந்தாய்
ஆ. என்னைப்பற்றி கனவு கண்டுகொண்டிருந்ததால் பஸ் வருவதை கவனிக்கவில்லை
இ. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது

7. உன்னுடைய பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்தபோது நீ என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாய்

அ. நீ என்னைத் திருமணம் செய்யப்போவதால்
ஆ. உனது அப்பா, அம்மா என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக
இ. ஏதோ பக்கத்திலிருப்பதால் அறிமுகப்படுத்தி வைக்கலாம் என்பதால்

8. நான் பெண்கள் தலையில் ரோஜா வைத்துக்கொள்வது எனக்குப் பிடிக்கும் என்று சொன்னேன். நீயும் அடுத்தநாள் ரோஜா சூடிக்கொண்டு வந்தாய்.
அ. எனக்குப் பிடிக்கும் என்பதால்
ஆ. உனக்கு ரோஜா பிடிக்கும்
இ. அன்று ரோஜாப்பூவை யாரோ உனக்குக் கொடுத்தார்கள், வேறு எதுவும் காரணமில்லை

9. அன்று எனக்குப் பிறந்தநாள். நான் காலை றுமணிக்கு கோவிலுக்கு வந்தபோது நீயும் அங்கு வந்திருந்தாய்

அ. என் பிறந்தநாளன்று என்னுடன் கடவுளைப் பிரார்த்திக்க விரும்பினாய்
ஆ. வேறு யாரும் எனக்கு வாழ்த்துக் கூறும் முன் நீ கூற விரும்பினாய்
இ. உனக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் கோவிலில் என்னை வாழ்த்த நினைத்தாய்.

மேலே உள்ள கேள்விகளின் பதில்களுக்கு
அ. 10 மார்க்
ஆ. 5 மார்க்
இ. 3 மார்க்

40க்குமேல் மார்க் வாங்கியிருந்தால் நீ என்னை நிச்சயமாகக் காதலிக்கிறாய் என்று பொருள். உடனே சொல்லிவிடு

30லிருந்து 40க்குள் – காதல் அரும்பிக்கொண்டிருக்கிறது

30க்குக் கீழ் – வேறு ஆளைப் பார்

இந்தக் கேள்விகளுக்கு ஆஷாவும் கேள்விகளிலேயே பதில் அனுப்பினாள்.

1. யாராவது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தால் பார்வை சாதாரணமாக அங்குதான் போகும்
அ. ஆமாம். ஆ. இல்லை

2. ஒரு பெண் சிரித்துக்கொண்டே யாரையாவது பார்த்தால் அதற்குப் பெயர் காதலா?

அ. ஆமாம் ஆ.இல்லை

3. பாடிக் கொண்டிருக்கும் போது வரிகளை மறந்துவிட்டால் பாடலை நிறுத்துவார்கள்

அ. ஆமாம். ஆ.இல்லை

4. நான் என் தோழிகளுக்கு என்னுடைய சின்ன வயசு போட்டோக்களைக் காண்பித்துக் கொண்டிருந்தபோது நீ உன் மூக்கை நுழைத்தாய்.
அ. ஆமாம். ஆ. இல்லை

5. நான் உன் கையைப் பிடிப்பதை தவிர்க்க நினைத்தேன்

அ. ஆமாம். ஆ.இல்லை

6. என்னுடைய உயிர்த் தோழிக்காக நான் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கக்கூடாதா?

அ. ஆமாம் ஆ. இல்லை

7. உன்னை என் நண்பனாக எனது பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்துவது தவறா?

அ. ஆமாம் ஆ. இல்லை

8. உனக்கு தாமரைப்பூ பிடிக்கும், வாழைப்பூ, காலிஃப்ளவர் பிடிக்கும் என்று கூட சொன்னாய். அது உண்மைதானே?

அ. ஆமாம். ஆ இல்லை

9. ஓ! அன்று உனக்குப் பிறந்தநாளா? அதுதான் கோவிலுக்கு வந்திருந்தாயா? நான் தினமும் கோவிலுக்கு வருவேன் என்று உனக்குத் தெரியுமா?

அ. ஆமாம். ஆ. இல்லை

நீ எல்லாக் கேள்விகளுக்கும் 'ஆமாம்' என்று பதில் சொல்லியிருந்தால் நான் உன்னைக் காதலிக்கவில்லை என்பது புரிந்திருக்கும். இல்லை என்று பதிலளித்தால் உனக்கு காதல் என்றால் என்னவென்று புரியவில்லை என்று அர்த்தம்.

shared via

comments | | Read More...

சிறுகதையா ..... தொடர் கதையா ? Ennaval muththam tamil kavithai

சிறுகதையா ..... தொடர் கதையா ?
By kavitha

என்னவள் தந்த முத்தம் ....

அது சிறுகதையாய் முடிந்து விடாமல் ...

தொடர்கதையாய் தொடர்ந்திடதா....?

என ஏக்கங்களுடன்  ...

shared via

comments | | Read More...

உடலின் பேரின்பம் udalin perinbam tamil kavithai

உடலின் பேரின்பம்
By kavitha

பெண்ணைத் தேடு
காதலி
காதலை உணர்
அனுபவி.
காதல் உன்னதம்
உடலின் பேரின்பம்
வென்றவர்க்குத்
தென்றல் காற்று
தோற்றவர்க்கோ
கடும்புயல்! !

shared via

comments | | Read More...

இதய பறிமாற்றம் ithaya patimaatram tamil kavithai

Penulis : Tamil on Sunday, October 13, 2013 | 4:51 PM

Sunday, October 13, 2013

இதய பறிமாற்றம்....
by kavitha

கொஞ்சினேன்
கெஞ்சினேன்
குழைந்தேன்
நெளிந்தேன்
என்னவளின்
இதயத்தில் நுழைய...

நுழைந்தேன்
நிறைந்தேன்
மகிழ்ந்தேன்...

இன்று 
அவளது இதயம்
நான்...

எனது 
இதயம்
அவள்...

Show commentsOpen link

comments | | Read More...

நீ காதல் கீதம் பாடுகிறாய் ....! Nee kathal keetham tamil kavithai

Penulis : Tamil on Saturday, October 12, 2013 | 7:35 AM

Saturday, October 12, 2013

நீ காதல் கீதம் பாடுகிறாய் ....!!!
by (கவிஞர் K இனியவன்)

காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

காதலிக்க நீ 
தயார் -என்னை 
முற்கம்பிக்குள் 
நிற்க சொல்லுகிறாய் 

நான் உறங்கும் 
நேரம் 
நீ காதல் கீதம் 
பாடுகிறாய் ....!!!

எப்போது காதல் 
வரும் என்று ஏங்கிய நான் 
எப்போது போகும் என்று 
ஆக்கிவிடாதே 

கஸல் 530
Show commentsOpen link

comments | | Read More...

இமைகளை கடக்கும் கனவுகள்.. imaigal tamil kavithaigal

Penulis : Tamil on Friday, October 11, 2013 | 10:57 PM

Friday, October 11, 2013

இமைகளை கடக்கும் கனவுகள்...!

by kavitha கவிதைகள் (Kadhal Tholvi .. தொல்லை

உனக்காக ஒரு கவிதைக்காக
வார்த்தைகளை நான் தேடும்...
பொழுதிலாவது கொஞ்சம்
குறுக்கும் நெடுக்குமாய்
நினைவுகளில் நடந்து...
என்னை கலைக்காமலிரேன்!

* * *

சபதம்

இரு இரு...
உன் மெளனத்தை..
என் மெளனத்தாலேயே
உடைக்கிறேன்!

* * *

கோபம்

எல்லோரையும் நேராகவும்
என்னை மட்டும் கடைக் கண்ணாலும்
நோக்கும் உன் விழிகளுக்கு
ஏனிந்த ஓர வஞ்சனை?

* * *

சந்தோசம்

எல்லோரிடமும் பேசி
என்னோடு பேசாமல் போனால்
பேசாமல் போய் விடுமா
நம் காதல்?
நீ உதடுகளுக்கு காவல் போட்டாய்
கண்களின் வழியே
கள்ளத்தனமாய் அது
எட்டிப் பார்க்கிறதே
என்னடி செய்வாய்?

* * *

தூரம்

நீயும் நானும் அருகருகே...
நம் காதலைப் பற்றிய
அதீத கற்பனையில்
நம்முள் நிறைந்த காதல்
உனக்கும் எனக்குமான
இடைவெளிகளில் நிரம்பி ததும்ப
நெருக்கத்தில் தொலையும் காதலை
தூரங்களில் தானே ரசிக்கிறோம்?

* * *

சோர்வு

உன்னை காதலிக்கிறேன்
என்று சொல்லத் தெரியாமல்
எத்தனை கவிதைகளைதான்
நானும் எழுதுவது?
எல்லா கவிதைகளும்
காதல் மாதிரி ஒன்றை சொல்லிவிட்டு
கவனமாய் காதலை சொல்லாமல்
விட்டு விடுகிறது!
Show commentsOpen link

comments | | Read More...

காதல் பயணம் kathal payanam tamil kavithai

காதல் பயணம்
by kavitha
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

என்னோடு
இறுதி வரை
பயணிப்பது
அவளல்ல...

அவள்
விட்டுச் சென்ற
காதல்...!
Show commentsOpen link

comments | | Read More...

தேன்விழியால் சொன்னது thenvizhi tamil kavithai

Penulis : Tamil on Thursday, October 10, 2013 | 9:40 PM

Thursday, October 10, 2013

தேன்விழியால் சொன்னது

by (KalpanaBharathi)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

பூவிதழ் விரித்துப் புன்னகை புரிந்தாள்

நாவித்ழால் நற்றமிழ் கவிதை தந்தாள் 

தேன்விழியால் சொன்னது புரியவில்லை 

தினம் கேட்கிறேன் அவள் சொல்லவில்லை.

~~~கல்பனா பாரதி~~~

Show commentsOpen link

comments | | Read More...

மென்மையான காதல் உணர்வு menmaiyana kathal unarvu tamil kathal kavithai

Penulis : Tamil on Wednesday, October 9, 2013 | 8:38 PM

Wednesday, October 9, 2013

மென்மையான காதல் உணர்வு

by kavitha

துளை போட்ட 
கனகாம்பர இதழ்.......

தேவதை காதின் 
அடிப்பக்க மடல்....

அத்தனை மென்மை
அதுவே உண்மை....
Show commentsOpen link

comments | | Read More...

உன் காதலை ..? Un kathalai tamil kavithaigal

உன் காதலை ..?

By kavitha

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
பகலவனா ...?
இருளவனா ...?

பகலாக இருந்தால் ..
ஓடி ஒளிக்கிறாய் 
இருளாக இருந்தால் 
தூங்குகிறாய் .....!!!

காதல் மனத்தால் ..
மனதில் வரும் உயிர் 
அதை சமாதியாக்கி விட்டாய் ....!!!

Show commentsOpen link

comments | | Read More...

தாம்பத்யம் thambathiyam tamil kavithai

தாம்பத்யம்
by tamil kavitha

இரு உடல்களின்
இணை பிரியா கூட்டணி
தாம்பத்யம்....!

Show commentsOpen link

comments | | Read More...

காதலி kathali tamil kathal kavithaigal

Penulis : Tamil on Tuesday, October 8, 2013 | 6:13 PM

Tuesday, October 8, 2013

காதலி
by (பேரூர் பார்த்திபன்)

காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

ஆசை   தான் உன்னிடம்சொல்ல  !!!  
           பாசை தான்  உன்னிடம் பாட !!!                          
     கோபம் தான் என்னுள் நீ இருப்பதால் !!!             
        அனுதாபம் தான்  என்னையும் நீ நினைப்பதால் !!!  

என் கண்கள் சொன்னது நீ கரைந்து விடுவாய் என்று !!            

      ஆம் கரைத்தேன் நீ முதல் முறை பார்த்ததும் பனியாய்!!!                                                                          

எந்தன் மனது சொன்னது பைத்தியம் என்று !!!                                                          

நான் சொன்னேன் அதற்கு வைத்தியம் நீ  என்று!!!


Show commentsOpen link

comments | | Read More...

காதல் புதைக்குழி ! Kathal tamil kavithai

காதல் புதைக்குழிக்குள் ...!!!
by (கவிஞர் K இனியவன்)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

செத்த பின் மண்ணில் 
புதைக்கப்படும் உடல் 
நீ உயிரோடு புதைத்து 
விட்டாய் என் இதயத்தை 
நீயும் உயிருடன் 
நானும் உயிருடன் 
காதல் புதைக்குழிக்குள் ...!!!
Show commentsOpen link

comments | | Read More...

சிறுக்கி மகளுடன் காதல்...! Tamil girl kathal

Penulis : Tamil on Monday, October 7, 2013 | 6:51 PM

Monday, October 7, 2013

சிறுக்கி மகளுடன் காதல்...!!! (Mano Red)
by (mano red)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today,

நாலு பக்க நெஞ்சுக்குள்ள
காலு வைக்கும் மயிலே,
நானும் கொஞ்சம் பாவமடி
காதல ஆழமா இறக்கி வை...!!

போனாப் போகுதுன்னு
பொறம்போக்கா நான் திரிஞ்சேன்,
பொட்டப் புள்ள உன்னப் பாத்து
பொசுக்குனு கிறங்கிப் புட்டேன்..!!

சொன்னவன் பொய்யெல்லாம்
சொல்லாமப் போகையிலே,
சோலைக்குயில் உன் பேச்சுல தான்
சொர்க்கமே தெரியுதடி..!!

பாவிப் பய மக
படபடன்னு துள்ளி வருகையிலே
பல்லுப் போன கிழவன் கூட
பல்லுத் தேச்சு பாக்குறாண்டி..!!

சிறுக்கி மக உன்ன
சிரிக்க சொல்லி கேட்கையிலே,
சிதம்பர ரகசியமெல்லாம்
சிதறித் தான் போகுமடி...!!

கிறுக்குப் பய என்னைய
கிறங்கடிக்க வச்சுப் புட்ட,
சூதுவாது தெரியாம தான்
சூதுகொண்டு ஓடிப் போய்ட்ட..!!

நெசமா உன் காதல 
நெஞ்சத் தொட்டு சொல்லிப் பாரு,
நெஞ்ச கிழிச்சுக் காட்டுறேன்
நெருப்ப அள்ளிக் குடிக்கிறேன்..!!

மிச்சமுள்ள உசுர வச்சு
சொச்ச நாள கடத்திடுவேன்,
பிச்சை எடுத்த பழக்கமில்ல
காதல் பிச்சை எடுக்க நினைக்கிறேனே..!!
Show commentsOpen link

comments | | Read More...

இதயம் இருக்காது ....!

இதயம் இருக்காது ....!!!
by (கவிஞர் K இனியவன்)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

இதயம் ஒன்று இருந்தால் 
காதல் என்ற ஒன்று இருக்கும் 
அப்படி ஒன்றும் எனக்கு இல்லை 
என்று சொல்பவர்களை -பரிசோதித்து 
பாருங்கள் இதயம் இருக்காது ....!!!

Show commentsOpen link

comments | | Read More...

காதலும் , நட்பும் love and friendship tamil kavithai

காதலும் , நட்பும்
by (mohd farook)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

காதல்  வந்து  போகும்   வசந்தம் 
நட்பு  நின்று  நிலைக்கும்  சுகந்தம் !
காதல்  கரையில்  நிற்கும்
நட்பு   கடலிலும்  நிற்கும்  !
காதல்  அரவனைக்கச்  சிறக்கும் 
நட்பு   இயல்பாகவே    சிறக்கும் !
காதல்  இடித்துச் சொன்னால்  ஓடியும் 
நட்பு  இடித்துச் சொன்னாலும்  ஒளிரும் !
காதலுக்கு  சண்டையிடும்   சாதி 
நட்புக்கு  கைகுலுக்கும்    சாதி !
இனித்திடும்  காதல்   கனியாகும் !
கணிக்குள்   இருக்கும்  விதையை எண்ணிடலாம் அணைத்திடும்  நட்பு  விதையே  ஆகும் 
விதைக்குள்  கனியை  எண்ணிடவா   முடியும் ?

நட்பில்  nashe
Show commentsOpen link

comments | | Read More...

கண்கள் my eyes tamil kavithai

கண்கள் (19) !
by (mohd farook)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...)

கண்கள்  !
உன் 
கண்ணின்  மொழி  என்ன ?
கவிதையா ? காவியமா  ?
இருவிழி  சொல்ல்வது 
குறுந்தொகையா ? இல்லை 
பெருந்தொகையா  ?
கடாரம் கொண்ட்டவர்களையும் 
பிள்ளைத் தமிழாக்கியதே  !!

நட்பில் nashe
Show commentsOpen link

comments | | Read More...

காதல் இறைவன் இருக்கும் இடம் ...!!! Kathal iraivan irukkum idam

Penulis : Tamil on Saturday, October 5, 2013 | 11:22 PM

Saturday, October 5, 2013

காதல் இறைவன் இருக்கும் இடம் ...!!!

by (கவிஞர் K இனியவன்)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )

காதலிப்பதே இல்லை 
என்று இருந்த என் 
கொள்கையை
பொய்ப்பித்தாய் .....!!!

நீ 
முன்னர் வந்தால் 
இதயம் சந்தோசப்படும் 
இப்போ மறைந்து 
விடுகிறது ....!!!

காதல் இறைவன் 
இருக்கும் இடம் 
நீ ஏன் கோயிலுக்கு 
செல்கிறாய் ....?


Show commentsOpen link

comments | | Read More...

Popular Posts

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. KATHAL VARIGAL . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger